Spread the love

ஜனவரி 2, 2020

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென மூன்று தமிழ்க் கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கட்சி, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி, சிறீகாந்தா தலைமையிலான புதிய கட்சியான தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளே இக் கூட்டணியில் அங்கம் வகிக்கவிருக்கின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று பொங்கலுக்கு முன்னர் கைசாத்திடப்படுமென்று தெரிகிறது.

இக் கூட்டணிக்குத் தலைவராக திரு விக்னேஸ்வரன் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டவுடன் தேர்தல் ஆணையத்தில் இக் கூட்டணி பதிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Related:  ஐ.நா. மனித உரிமைகள் சபை | இணைத் தலைமை நாடுகளின் காட்டமான அறிக்கை
பொங்கலுக்கு முன் மேலுமொரு தமிழ்க் கட்சிகளின் கூட்டணி?

பொங்கலுக்கு முன் மேலுமொரு தமிழ்க் கட்சிகளின் கூட்டணி?