அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக, நேற்று (புதன்) பதவியேற்ற ஜோ பைடன் நிர்வாகத்தில் உதவி ஜனாதிபதி கமலா ஹரிஸ் தவிர்ந்த 23 இற்கும் மேற்பட்ட இந்திய, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேச அமெரிக்கர்கள் பல்வேறு பதவிகளிலும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 20 பேர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
ஜமைக்கா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தந்தைக்கும், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தாய்க்கும் பிறந்த கமலா ஹரிஸ், உப-ஜனாதிபதியாகத் தெரியப்பட்டதன் மூலம், அப்பதவியிலமரும் முதலாவது பெண், முதலாவது கறுப்பினப் பெண், முதலாவது தெற்காசியப் பெண் என்ற வகையில் அமெரிக்க வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
இவர்களை விட பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட அலி ஜயிடி, இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் அமெரிக்கரான றோஹினி கொசோக்ளு, பங்களாதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெயின் சித்திக் ஆகியோர் வெள்ளைமாளிகையில் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். (படங்கள்: Courtesy: Times of India)






