‘பெளத்த-சிங்கள ஆணையின் மீது கைவக்காதீர்கள்’ – மஹாசங்கத்தின் ஊர்வலம் ஆரம்பம்

‘பெளத்த-சிங்கள ஆணை மீது கை வைக்காதீர்கள்’ என்ற சுலோகத்தைத் தாங்கிய பதாகைகளுடன் இன்று கொழும்பில் ஒரு ஊர்வலம் மஹாசங்கம் மற்றும் சிங்கள பெளத்த சமூகவலைத்தள செயற்பாட்டாளர்களால் இணைந்து நடத்தப்பட்டது.

கொழும்பு நெலும் பொக்கண தியேட்டரின் முன்னிலையில் ஆரம்பமான இவ்வூர்வலம் விஹாரமாதேவி பூங்காவில் அமைந்திருக்கும் புத்தர் சிலையின் முன்னால் நடைபெற்ற கூட்டமொன்றுடன் முடிந்திருக்கிறது.

‘பொய்யான போராட்டங்களினால் ஏமாற்றப்பட்டு மக்கள் வழங்கியிருக்கும் பெளத்த-சிங்கள ஆணை மீது கைவைக்க முயலாதீர்கள்” என்ற கருப்பொருளில் இவ்வூர்வலம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதை ‘ரட்ட வெனுவேன் அப்பி’ என்ற அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது.