பெளத்தர்களின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம் – சரத் வீரசேகர கூட்டமைப்பினருக்கு எச்சரிக்கை!
புத்த பிக்குகளையும், புத்தரின் போதனைகளையும் அவமதிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேசி வருவதாகவும் இதைத் தொடர்வதன் மூலம் பெளத்தர்களின் பொறுமையைச் சோதிக்க வேண்டாமெனவும் முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரா கூட்டமைப்பினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கொல்லப்பட்ட விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் அரசியல் கட்சி போல நடந்துகொள்கிறது. பிரபாகரன் மக்களைக் கொல்லும்போது பெளத்த சமூகம் சாதாரண தமிழர்களைக் கொல்லவில்லை. சிங்கள பெளத்த மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது” என வீரசேகரா பேசியிருக்கிறார்.
இவரது இனத்துவேசம் நிறைந்த பேச்சு பற்றி இதுவரை எந்த தென்னிலங்கை அரசியல்வாதிகளும் கண்டித்துப் பேசவில்லை. (Colombo Gazette)