BusinessTamil HistoryTechnology & Science

பெருமைக்குரிய தமிழர்கள் | குமார் மகாதேவா


இன்று உலகில் வாழும் அதி பணக்கார ஈழத் தமிழர்களில் ஒருவராகக் கணிக்கப்படுபவர் யாரென்று தெரியுமா?

குமார் மகாதேவா – இலங்கையில் புகழ்பூத்த பொன்னம்பலம் அருணாசலம் குடும்பத்தின் வழிவந்தவர், தற்போது மயாமி, ஃபுளோறிடாவில் குடும்பத்துடன் வாழ்கிறார்.

பொன்னம்பலம் அருணாசலம் (1853-1924)

தற்போது US$ 20 பில்லியன் மதிப்புள்ள இவர் ஸ்தாபித்த நிறுவன்ம் தான் அமெரிக்காவில் இருக்கும் கொக்னிசன்ட் டெக்னோலொஜி சொலுஷன்ஸ் (Cognizant Technology Solutions). உலகம் முழுவதும் 300,000 பணியாளர்களைக் கொண்டியங்கும் இந்த நிறுவனம் 1990 களில் ஆரம்பிக்கப்பட்டது. J.P.Morgan, Wells Fargo, Bank of America, BMW, Pfizer, Johnson & Johnson, Astra Zenica உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்குத் தேவையான கணநி மென்பொருளைத் தயாரித்துக் கொடுப்பது கொக்னிஷன்ட் ரெக்னோலொஜி நிறுவனம் தான். வருடத்துக்கு US$ 2 பில்லியன் டாலர்களைச் சம்பாதிக்கும் இந் நிறுவனத்தைத் தற்போது நிர்வகிப்பவர் லக்ஸ்மி நாராயணன்.

இலங்கையின் சட்டசபை அங்கத்தவராக இருந்த பொன்னம்பலம் அருணாசலம் (1853-1924), குமார் மகாதேவாவின் முப்பாட்டனார். பொன்னம்பலம் அருணாசலத்தின் மகன் அருணாசலம் மகாதேவா (1885-1969). இவர் வழக்கறிஞராகவும், அப்போது ஆட்சியில் இருந்த ஐ.தே.கட்சி சார்பில் உள்ளக அமைச்சராகவும் பின்னர் இந்தியத் தூதராகவும் பணியாற்றினார். அவரது இரண்டு பிள்ளைகளில் ஒருவர் பகு மகாதேவா (தேசமன்ய பாலகுமார மகாதேவா) ( 1921-2013) மற்றவர் The Legal System of Ceylon என்ற பிரபல நூலை எழுதிய பேராசிரியர் தம்பையா நடராஜா. (இவர் ஏன் மகாதேவா என்ற குடும்பப் பெயரைப் பாவிக்கவில்லை என்பது பற்றி அறிய முடியவில்லை).

சிறந்த வியபாரியாகிய பகு மகாதேவா, NDB Bank, DFCC Bank, Peoples Bank, Lanka Tiles ஆகிய நிறுவனங்களில் தலைமைப் பதவியில் பணியாற்றினார். அத்தோடு பாதுகாப்பு அமைச்சின் செய்லாளராகவும் இருந்தார்.

பகு மகாதேவாவின் மகன் தான் குமார் மகாதேவா. இலங்கையில் ஆரம்பக் கல்வியை முடித்த அவர் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மின் பொறியியல் கல்வியில் முதுமாணிப் பட்டத்தையும், பின்னர் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் வியாபார முகாமைத்துவத்தில் எம்.பி.ஏ. பட்டத்தையும் பெற்று சிறப்புத் தேர்வுடன் வெளியேறினார். இதைத் தொடர்ந்த்து அவர் BBC, AT&T ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு 1994 இல் Cognizant Technology Solutions என்ற நிறுவனத்தை உருவாக்கினார். 2003 இல் அப் பதவியைத் துறந்துவிட்டு இப்போது குடும்ப முதலீட்டு நிறுவனமான குபேரா பாட்னர்ஸ் இல் பங்காளராகவும் பல இலாப நோக்கற்ற நிறுவநங்களில் பணிப்பாளராகவுமிருந்து பலவிதமான தர்ம ஸ்தாபனங்கள் மூலம் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அவரது குடும்ப விவரங்கள் பொதுப்பரப்பில் கிடைக்கவில்லையாகினும், மகன் விஜே, மனைவி சிமி உள்ளார்கள் என அறியமுடிகிறது. (உதவி: விக்கிபீடியா, லிங்க்டின், ஹார்வார்ட் நியூஸ்..)