பெப்ரவரி 1 முதல் சில ஃபோன்களில் 'வட்ஸ்அப்' வேலை செய்யாது! -

பெப்ரவரி 1 முதல் சில ஃபோன்களில் ‘வட்ஸ்அப்’ வேலை செய்யாது!

Spread the love

ஜனவரி 10, 2020

Unsend messages

முகநூல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் சமூக ஊடகர்களின் செல்லப்பைள்ளையான ‘வட்ஸ்அப்’ பெப்ரவரி முதல் தனது புதிய மென்பொருளை (major update) அறிமுகப்படுத்துகிறது. பழைய இயங்குதளங்களைப் பாவிக்கும் சில பழைய ‘ஐ ஃபோன்’, ‘ஆண்ட்றோயிட்’ ஃபோன்களில் இது பெப்ரவரி முதல் வேலை செய்யாது என அறிவித்திருக்கிறார்கள். ‘விண்டோஸ்’ இயங்குதளத்தைக் கொண்டியங்கும் பல ஃபோன்கள் ஏற்கெனவே இச் சேவையை இழந்துவிட்டன.

பாவனையாளரின் பிரத்தியேகம், பாதுகாப்பு கருதி, சமீப காலங்களில், அநேகமான ‘ஸ்மார்ட் ஃபோன்’ நிறுவனங்கள் அவரவர் இயங்குதளங்களின் புதிய மென்பொருளைத் தரவிறக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். இதற்கிணங்க ‘வட்ஸ் அப்’ போன்ற தகவற் பறிமாற்ற நிறுவனங்களும் தமது மென்பொருளை மாற்றியாகவேண்டி ஏற்பட்டது. இதனால் ‘வட்ஸ் அப்’ பின் சில அம்சங்கள் ஜனவரி 31 முதல் இயங்காமல் விடலாம் என அந் நிறுவனம் தனது பாவனையாளரை எச்சரிக்கிறது.

பாதிக்கப்படும் ஃபோன்கள் / இயங்குதளங்கள்
அப்பிள் ஃபோன்கள்
  • Apple iPhone (iOS) – iOS8 அல்லது அதற்கு முந்திய iOS களில் ‘வட்ஸ் அப்’ முழுமையாக வேலை செய்யாது
  • iPhone 6 / iPhone 6 Plus – iOS9 இயங்குதளத்துக்கு மாற்றப்பட வேண்டும். iPhone 6s அல்லது அதற்குப் பிந்தியவை மாற்றம் செய்யத் தேவையில்லை.
  • iPhone 5/ iPhone 5s / iPhone 5c – iOS9
  • iPhone 4s – iOS9 இற்கு மாற்றப்பட வேண்டும்
  • iPhone 4 அல்லது அதற்கு முந்தியவற்றில் iOS9 இற்கு மாற்ற முடியாது எனவே அவற்றில் ‘வட்ஸ் அப்’ வேலை செய்ய்யாது.
அண்ட்றோயிட் ஃபோன்கள்
  • அண்ட்றோயிட் ஃபோன்களில் 4.0.3 version இற்கு (2011) முந்திய இயங்குதளத்தைப் பாவிக்கும் போன்கள் (இதை ஐஸ்கிரீம் சாண்ட்விச் என்றும் அழைப்பார்கள்) வேலை செய்யாது.
  • அண்ட்றோயிட் v 2.3.7 (Gingerbread) ம் அதற்கு முந்திய வகைகளும் வேலை செய்யாது.
ஃபோன்களின் இயங்குதளங்கள் எந்த வகையென்று (version) எப்படி அறிவது?

முதலில் உங்கள் ஃபோனில் ‘Settings’ ஐத் தெரிவு செய்யுங்கள், பின்னர் ‘General’ , அதன் பிறகு ‘Software Update‘..

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  CES 2020 | Consumer Electronics உற்சவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *