Health

பெண்கள் மீது கபடமாக வலிந்த கருத்தடை

றொபேர்ட் எஃப். கென்னடி ஜூனியர் சர்ச்சைகளுக்குப் புதியவரல்ல. சமீபத்தில், அமெரிக்க அரசின் சர்வ வல்லமை பொருந்திய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் (CDC) பல தலைகளை உருட்டியவர். “தடுப்பூசிகள் என்ற பெயரில் திட்டமிட்ட பல கொடுமைகள் மனிதகுலத்தின்மீது புரியப்படுகின்றன. இவற்றின் பின்னால் மேற்கத்தைய அரசுகளும், பில் கேட்ஸ் போன்ற பல கோடீஸ்வரர்களும் இருக்கிறார்கள்” என அவர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டி வருபவர்.

கென்னடி குடும்பம் பொதுவாகவே மிதவாதிகளாக இருப்பவர்கள். அப்படியிருந்தும் இவர் எப்படி தீவிர வலதுசாரியான ட்றம்ப் நிர்வாகத்தின் வலையில் வீழ்ந்தார் எனப் பலர் குழம்பிப்போனதுண்டு. ட்றம்ப் போன்ற தீவிர வலதுசாரிகளுக்கும் தடுப்பூசி, கருத்தடை போன்ற விடயங்களில் நம்பிக்கை இல்லை என்பதனாலும் மிதவாதப் போக்கைக் கடைப்பிடிக்கும் ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியைப் போலவே, பெருவணிக சமூகத்தினால் வாங்கப்பட்ட நிலையில் கென்னடி தனது இலக்கை எய்துவதற்கு குடியரசுக் கட்சியில் இணைந்தார் எனவும் கூறப்படுகிறது. மருந்து நிறுவனங்களின் கபடத்தனமான நடவடிக்கைகளை வெளிப்படுத்துவேன் என்ற சவாலோடு அவர் களத்தில் குதித்தார். அதன் முதற்படியாகவே அவர் தனது மேற்பார்வையின் கீழுள்ள நோய்க்கட்டுப்பாட்டு மையத்தில் பல மாற்றங்களைச் செய்தார். இப்போது அவரது கவனம் உலக சுகாதார அமைப்பின் மீது (WHO) குவிந்திருக்கிறது. தடுப்பூசி வழங்கல் என்ற திட்டத்தின் கீழ் பெண்கள் மீது வலிந்த கருத்தடை நிகழ்த்தப்பட்டு வருகிறது என குண்டொன்றைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.


உலக சனத்தொகைக் குறைப்பு என்பது மூத்த யூதர் றொத்ஷைல்ட் மற்றும் பில்டர்பேர்கர் குழு ஆகியோரது இரகசிய சதித்திட்டமென்று பல கிசி கிசுக்கள் ஓடித்திரிகின்றன. தமது பண, அதிகார பலங்களை வைத்து மனிதநேய நடவடிக்கைகள் என்ற பெயரில் அவர்கள் இத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் இதன் மூலம் குறிவைக்கப்படும் மக்கள் யூதர் மற்றும் வெள்ளையரல்லாதோர் என்பது இந்த கிசு கிசு கர்த்தாக்களின் கருத்து. இதற்கான பல ஆதாரங்களையும் அவர்கள் முன்வைக்கிறார்கள். மனிதாபிமானம் மேலோங்கிய சிலர் இப்படியான விடயங்களை வெளிக்கொணர முயற்சித்தாலும், பண பலமும், ஊடக பலமும், அதிகார பலமும் கொண்ட சில பெருந்தலைகள் இவர்களை எதோ ஒரு வகையில் அடக்கி விடுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் பரவலாக உண்டு.

றொபேர்ட் எஃப். கென்னடி சமீபத்தில் போட்டுடைத்திருக்கும் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் “சனத்தொகைக் குறைப்பிற்காக, கடந்த பல தசாப்தங்களாக, கேட்ஸ் அறக்கட்டளை போன்ற அமைப்புகளின் உதவியுடன், உலக சுகாதார நிறுவனம் பல்வேறு நாடுகளிலும் இரகசிய கருத்தடைத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது” என்பது. “ஆபிரிக்காவிலுள்ள கென்யா நாட்டில் வாழும் மக்களுக்கு ‘ஏர்ப்பூசி’ (tetanus) என்ற பெயரில் ‘மனித கோறியோனிக் கோனடோட்றோப்பின்’ (human chorionic gonadotropin (hCG)) என்ற ஹோர்மோன் கலந்த தடுப்பூசி உலக சுகாதார அமைப்பின் ‘ஏர்ப்பு நோய்த் தடுப்பு’த் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது” என்கிறார் கென்னடி. ஏர்ப்பு மருந்துடன் சேர்த்து இந்த ஹோர்மோன் ஒருவரது உடலில் ஏற்றப்பட்டால் அது அவரது கருத்தரிக்கும் தன்மையை அகற்றி விடுகிறது என்கிறார் கென்னடி. இதிலுள்ள கபடத்தனம் என்னவென்றால், கென்னடியின் கருத்துப்படி, வழக்கமான ‘ஏர்ப்பூசி’ நிர்வாகத்தின்போது ஒரே ஒரு தடவை தடுப்பூசியைப் போட்டுவிட்டால் வாழ்நாள் முழுவதும் அது பலன் தரும். ஆனால் இந்த தடுப்பூசி 6 மாதங்களில் குறைந்தது ஐந்து தடவைகள் ஏற்றப்பட வேண்டும். அதைவிட மோசமான கபடத்தனம் என்னவென்றால் இது குழந்தை பெறும் வயதுடைய (14 -34 வயது வரை) பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. ‘ஏர்ப்பு’ நோய் என்பது குளொஸ்ட்றீடியம் ரெற்றனி (Clostridium tetani bacterium) என்ற பக்டீரியா தொற்றினால் ஆண், பெண் என அனைவரையும் பாதிக்கும் ஒரு நோய். அப்படியிருக்க இந்த குறிப்பிட்ட தடுப்பூசியை ஏன் குழந்தை பெறும் பெண்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்? அது மட்டுமல்ல இத்தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முன் அப்பிராந்தியத்தில் ‘ஏர்ப்பு’ நோய் அறிகுறிகள் பரவலாக அறியப்பட்டிருக்கவுமில்லை.

இத்தடுப்பூசி விவகாரத்தில் ஏதோ கபடத்தனமிருக்கிறது எனச் சந்தேகித்த கென்யா கத்தோலிக்க மருத்துவர் சங்கம் இக்குறிக்கப்பட்ட தடுப்பூசிப் போத்தல்களை எடுத்து பல்வேறு ஆய்வுகூடங்களில் பரிசோதித்தது. இறுதியில், இம்மருந்துகளில் hCG ஹோர்மோன் கலக்கப்பட்டிருப்பதை அனைத்து பரிசோதனைகளும் உறுதி செய்தன. உலக சுகாதார நிறுவனம் இவ்வுண்மையை ஆரம்பத்தில் மறுத்திருந்தாலும் பின்னர் அதை ஏற்றுக்கொண்டுவிட்டது.

“இக் கென்ய சம்பவம் தனித்துவமான ஒன்றல்ல. இதே போன்று பல கபடத்தனமான கருத்தடை முயற்சிகளை உலக சுகாதார நிறுவனம் கடந்த 20 வருடங்களாக, நிகராகுவா, மெக்சிக்கோ, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மேற்கொண்டு வருகிறது” என்கிறார் கென்னடி.