HumourLIFEScience & Technology

பூனை ஏன் பெட்டிகளை விரும்புகிறது?

வீட்டில் பூனயைக் காணவில்லையா? பக்கத்து வீட்டுப் பூனை தற்காலிகமாகக் கடத்திக்கொண்டு போயிருக்காவிடில், அநேகமாக எங்காவது ஒரு வெற்றுப் பெட்டியில் ஜாலியாகக் குந்திக்கொண்டு இருக்கலாம், தேடுங்கள். பூனைகளுக்கு பெட்டிகள் மீது அவ்வளவு காதல்.

Image Credit: Tara McCready

பட்டம் பெறாத விஞ்ஞானிகள் சிலரது ஆய்வின்படி, பூனைகள் பெட்டிகளை மட்டுமல்ல, பெட்டியாக வரையப்பட்ட சட்டகங்களைக் கண்டாலும் விடுவதில்லை. மனிதரைப் போலவே பூனைகளும் ஒளியியல் மாயைகளில் (optical illusions) மயங்கி விடுகின்றன என நம்பப்படுகிறது.

இது வீட்டுப் பூனைகளின் குணம் மட்டுமல்ல, ஒரு பரம்பரைக் குணம். சிங்கங்கள், புலிகள், காட்டுப் பூனைகள் போன்றனவும் பெட்டிகளையும், பெட்டி போடப்பட்ட சட்டகங்களையும் விரும்புகின்றன என ஃபுளோறிடா விலங்கு சரணாலயப் பணியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

பெட்டிகளின் மீதான ‘பூனைக்’ காதல், முப்பரிமாண வடிவங்கள் மீதானது மட்டுமல்ல. நிலத்தில் சதுரமாக ஏதாவதொன்றை வரந்துவிட்டாலே போதும், பூனை அதற்குள் வந்து குந்திவிடும் என்பதை, 2017 இல், பல சமூக வலைத் தள அன்பர்கள் பதிவிட்டிருந்தனர்.

ஏற்கெனவே நாயைப் பூனைஓயோடு விளையாடும்படி அழைப்பதற்கு ஒருவர் ஒளியியல் மாயை முறையைப் பாவித்து வெற்றி கண்டதாக வந்த செய்தியைத் தொடர்ந்து நியூ யோர்க், ஹண்டர் கல்லூரியைச் சேர்ந்த ‘சிந்திக்கும் நாய் மையம்’ (Thinking Dog Center) பலவிதமான பரிசோதனைகளைச் செய்து வருகிறது.

உங்கள் வீட்டிலும் செல்லப் பிராணிகள் விசித்திரமான பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தால் சிறிய காணொளியை எடுத்து editor@marumoli.com இற்கு அனுப்புங்கள். அனுபவமென்று வரும்போது நாமெல்லோரும் ‘பட்டம் பெறாத விஞ்ஞானிகள்’ (Citizen Scientists) தானே.

அதுசரி, பூனை ஏன் பெட்டிகளை விரும்புகிறது? பதில்: டிசைன் அப்படி!!!

-மாயமான்