புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சிலவற்றின் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியது

சில தனிப்பட்டவர்கள் மீதான தடையும் நீக்கப்பட்டது (பட்டியல் கீழே)

நல்லாட்சி அரசினால் நீக்கப்பட்டிருந்த புலம் பெயர்ந்த அமைப்புகள் மற்றும் தனிப்பட்டவர்கள் மீது தடைகளை கோதாபய அரசு ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்திருந்தது. தற்போது இப் பட்டியலிலிருந்து சில அமைப்புகளையும், தனிப்பட்டவர்களையும் மீண்டும் நீக்குவதாக பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவிப்பு மூலம் தெரியப்படுத்தி உள்ளது.

இவற்றில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை (GTF), அதன் தலைவர் சுரேன் சுரேந்திரன், பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் கனடிய தமிழர் பேரவை ஆகியன அடங்கும்.

2014 இல் ராஜபக்ச அரசினால் பல புலம்பெயர்ந்த அமைப்புகள் மீதும் தனிப்பட்டவர்கள் மீதும் அரசியல் காரணங்களுக்காக இலங்கை அரசினால் தடகள் விதிக்கப்பட்டிருந்தன. 2015 இல் சிறிசேன / ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசு பல அமைப்புகள் மற்றும் தனிப்பட்டவர்களது பெயர்களை இப் பட்டியலிலிருந்து நீக்கியிருந்தது. மறைந்த அமைச்சர் மங்கள சமரவீர இத் தடைநீக்கத்துக்குக் காரணமாக இருந்தவர் எனக் கூறப்படுகிறது. பின்னர் 2021 இல் பிரித்தானிய தமிழர் பேரவை (BTF-UK), உலகத் தமிழர் பேரவை (GTF-UK), கனடிய தமிழ் காங்கிரஸ் (CTC-Canada), அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC-Australia), கனடிய தமிழர் தேசிய அவை (NCCT-Canada), தமிழ் இளையோர் அமைப்பு (TYO), உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC-France) ஆகிய அமைப்புக்கள் பாதுகாப்பு அமைச்சினால் மீண்டூம் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டன. பட்டியலில் இடம்பெறும் அமைப்புகள் மற்றும் தனிப்பட்டவர்களின் பெயர்களைக் கொண்ட விபரம் கீழே தரப்பட்டுள்ளது.