புராதன ஆபிரிக்க மரபணு மீது முழுமையான ஆய்வு
ஜனவரி 23, 2020

தற்போதய கமரூன் நாட்டின் மேற்குப்பகுதியில் கற்குகையொன்றில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் நான்கு குழந்தைகளின் எலும்புக்கூடுகளிலிருந்து எடுக்கப்பட்ட மரபணுக்களிலிருந்து கற்கால மக்கள் பற்றிய புதிய தகவல்களை அறியக்கூடியதாகவுள்ளது.
இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், தற்போது இப்பிரதேசத்தில் வாழும் ‘பாண்டு’ மொழி பேசும் மக்களுக்கும் இக் கற்கால மக்களுக்கும் மரபணு விடயத்தில் எந்தவித தொடர்புகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான். மாறாக, இக் குழந்தைகள், தற்போது மத்திய ஆபிரிக்காவில் வாழ்ந்துவரும் வேட்டையாடி வாழும் மக்களுடன் அதிக நெருக்கமான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறார்கள் என ஆய்வாளர் தெரிவிக்கின்றனர்.
இக் கண்டுபிடிப்புகளின் மூலம், உலகத்தில், ஆபிரிக்கா ஒன்றே பல வகைப்பட்ட பாரம்பரியங்களைக் கொண்ட மனிதர்கள் வாழ்ந்த இடமாக நாம் கருதவேண்டியிரூக்கிறது என இவ்வாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.