'புத்தரின்' உருவத்தைக் கொண்ட சேலையை அணிந்த பெண்மணி கைது! -

‘புத்தரின்’ உருவத்தைக் கொண்ட சேலையை அணிந்த பெண்மணி கைது!

Spread the love

திருகோணமலையில் சம்பவம்

நேற்று (வியாழன்) திருகோணமலை பேருந்து நிலையத்தில், ‘புத்தரின்’ உருவத்தைப் பொறித்த சேலையை அணிந்திருந்த பெண்மணி ஒருவர் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சமபவ இடத்திற்கு வந்திருந்த பிக்கு ஒருவரின் தூண்டுதலினால் அங்கிருந்த சிலர் குறிப்பிட்ட பெண்மணியைப் பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்ததாக அறியப்படுகிறது.

இப்படியான சம்பவங்கள் சமீபத்தில் அதிகமாக இடம்பெற்று வருவதாக சMஉக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள். புத்தரை ஒத்த சில சொரூபங்கள், குறிப்பாக கிருஷ்ணரின் சொரூபம் பதித்த ஆடைகளை அணிந்திருந்த பெண்கள் சிலர் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் இது குறித்து அவர்கள் ஆத்திரமும் அவநம்பிக்கையும் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

இச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட பெண்மணி மிரட்டப்பட்டதாகவும் சமூக செயற்பாட்டாளர் கரிகாலன் தனது கீச்சல் செய்தி மூலம் தெரிவித்ததாக றிப்பப்ளிக்நெக்ஸ்ட் என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  பெப். 4 இல், இராணுவத்தினருடன் சேர்த்து விடுதலைப் புலி கைதிகளையும் விடுதலை செய்க | ஜனாதிபதியிடம் அஜித் பிரசன்னா வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *