Sri Lanka

புதைத்துவைக்கப்பட்ட ஆயுதங்களை வெள்ளம் வெளிக்கொணர்ந்தது


கிளிநொச்சி, அறிவியல் நகரில் புதைத்துவைக்கப்பட்ட ஆயுதங்கள் சில திங்களன்று ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அம்பலமாகியது எனக் கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் விவசாய வளாகத்தின் கட்டிடத்துக்கு அருகே விசேட படையணியின் ஆதரவுடன் கிளிநொச்சி பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட தோண்டுதலின்போது புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவற்றில் ஐந்து T-56 றைபிள்கள், ஒரு மகசின் மற்றும் 40 ரவைகள் அடங்கும்.

விடுதலைப் புலிகளினால் புதைத்துவைக்கப்பட்டதாகக் கருதப்படும் இவ்வாயுதங்களை அழிப்பதற்கு மாஜிஸ்திரேட்டின் உத்தரவை எதிர்பார்த்திருப்பதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.