புதிய வரவு | போயிங் 777x

Spread the love
அதி தூர பறப்பு வசதி, அகலமான யன்னல்களைக் கொண்ட புதிய வடிவமைப்பு

ஜனவரி 25, 2020

புதிய தலைமுறை – போயிங் 777X

போயிங் 737 max பிரச்சினைகளால் வர்த்தக ரீதியில் பலத்த இழப்புக்களைச் சந்தித்துக்கொண்டிருந்த போயிங் நிறுவனம் தனது புதிய ‘குழந்தை’ 777X ஐ உலகுக்கு அறிமுகப்படுத்துகிறது. நேற்று (வெள்ளி) நடைபெறவிருந்த பரீட்சைப் பறப்பு, காலநிலை சாதகமின்மையால் தாமதம்மகிறது எனினும் அதன் வரவு விண் பயணிகளைக் குஷிப்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது.

போயிங் கின் 777 வரிசை விமானம் பறக்கத் தொடங்கி 26 வருடங்கள் ஆகிறது. 777X அக் குடும்பத்தின் (777) இரண்டாவது தலைமுறை.

இதன் வடிவமைப்பில் உள்ள பிரதான மாற்றம், இறக்கைகளின் நுனிகள் மேல்நோக்கி மடிக்கக் கூடியவை. இதன் நோக்கம் விமான நிலையங்களில் அதிகளவு விமானங்களை அடக்கிக் கொள்ளலாம் என்பதற்காக (அகலக் குறைப்பினால்) எனப்படுகிறது. அதைவிட, இறக்கையின் பரப்பளவு அதிகமாக்கப்பட்டிருக்கிறது. இதனால் பறப்பு இலகுவாக்கப்பட்டு, எரிபொருட் பாவனை குறைக்கப்படுகிறது (உலகின் அதிக CO2 வாயு உற்பத்தி (5%) விமானங்களிலிருந்து வருகிறது).


அதை விட, இவ் விமானங்களில் யன்னல்கள் பெரிதானவை. அதிக பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம், ஏற்கெனவே இருக்கும் 777 விமானங்களை விட அதிக தூரம் செல்லக்கூடியவை. போயிங் நிறுவனத்தின் கூற்றுப்படி, இதுவே தற்போதுள்ள அனைத்து விமானங்களிலும் மிகவும் வினைத்திறனுள்ளது (பயன் / செலவு).

மேலே குறிப்பிட்டதுபோல, இவ் விமானத்தில் இருக்கக்கூடிய விசேட அம்சம், பறக்கும்போது 235 அடியாக இருக்கும் இதன் இறக்கைகள், விமானம் தரையிறங்கியதும் 213 அடியாகக் குறைக்கப்படக் கூடியவை. இறக்கைகளின் நுனிகளை மேல்நோக்கி மடிப்பதால் இது சாத்தியமாகிறது. இதனால் பல நெரிசலான விமானத் தளங்களில் விமானம் இலகுவாக நுழைய முடிகிறது. ‘எயர்பஸ் A380’ விமானங்கள் 261 அடி பறக்கைகளை அறிமுகம் செய்தபோது பல உலக விமானத்தளங்கள் பெரும் பணச் செலவில் மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது.

777X அடுத்த வருடமளவில் தனது சேவையை ஆரம்பிக்க முடியுமென போயிங் நிறுவனம் தெரிவிக்கிறது. பிரிட்டிஷ் எயர்வேய்ஸ், கதே பசிபிக், எமிறேட்ஸ், லுப்தான்சா, சிங்கப்பூர் எயர்லைன்ஸ் உட்பட எட்டு நிறுவனங்கள் ஏற்கெனெவே கொள்வனனவுக்கான உறுதிகளை வழங்கியிருக்கின்றன.

அதற்கு முன்னர் அமெரிக்காவின் மத்திய விமானப் பறப்பு நிர்வாகம் (Federal Aviation Administration) இவ் விமானத்தின் பறப்புக்கான உத்தரவை வழங்கவில்லை. ஏற்கெனவே 737max விடயத்தில் முழுமையாகப் பரீட்சிக்கப்படாமல் உத்தரவு வழங்கப்பட்டதென அதன் மீது குற்றச்சாட்டுகள் உண்டு.

குறிப்பாக, பறப்பு ஆரம்பிக்கும்போதும், பறக்கும்போதும் சிறகுகள் மடிக்கப்பட்டுள்ளனவா என்பது போன்ற நிலைகளை, ஒன்றிற்கு மேலான வழிகளில், விமான ஓட்டிகளுக்கு அறியத் தரும்தொழில்நுட்பம் இயக்க நிலையில் இருக்க வேண்டும் என்பது மத்திய பறப்பு நிர்வாகத்தின் நிபந்தனைகளில் ஒன்று.

Related:  கோவிட்-19 | முன்னறிவித்தல் தரும் ஸ்மார்ட் எலெக்ட்றோணிக்ஸ்

போயிங்கின் 737 Max விமான விபத்துக்களிலும் மொத்தம் 346 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்போது அதன் 387 (737 Max) விமானங்கள் பறப்பு அனுமதியின்றித் தரையில் நிற்கின்றன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>