கொழும்பில் சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் -

கொழும்பில் சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல்

Spread the love

மீண்டும் வெள்ளை வான் பயங்கரவாதமா?

நவம்பர் 26, 2019

சுவிஸ் தூதரக ஊழியர் ஒருவர் நேற்று வெள்ளை வான் ஒன்றில் கடத்தப்பட்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக லங்கா நியூஸ்வெப் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Swiss Embassy in Sri Lanka
இலனக்கையிலுள்ள சுவிஸ் தூதரகம்

இது சம்பந்தமாக இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் குற்ற விசாரணைத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளதாகவும் அத்தோடு, நாளை பிரதமர் மஹிந்த ராஜபக்சவைச் சந்திக்கவிருப்பதாகவும் தெரிகிறது.

கடத்தப்பட்டவர், குற்றப் பிரிவின் தலைமை அதிகாரி ஏட்றியன் நிஷாந்த சில்வா அவர்கள் குடும்பத்தினருடன் சடுதியாக இலங்கையை விட்டு வெளியேறியது தொடர்பாக விசாரிக்கப்பட்டதாகவும், அரச ஊடகப் பேச்சாளர் இவ் விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் லங்கா நியூஸ்வெப் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிஸ் தூதரக அறிக்கை

புதிய அரசாங்கத்தை அவமானத்துக்குள்ளாக்குவதற்கு வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட காரியமென ஊடகப் பேச்சாளர் தெரிவித்ததாக லங்கா நியூஸ்வெப் கூறியிருக்கிறது.

இதே வேளை, நிஷாந்த சில்வாவின் அனுமதிக்கப்படாத பயணம் பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்ற விசாரணைத் திணைக்களத்துக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

பல பிரபலங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரணை செய்துகொண்டிருந்த குற்ற விசாரணைப் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா நேற்றுத் தன் குடும்பத்துடன் சடுதியாக ஜெனீவா சென்றிருந்தார். கடமையில் இருக்கும் ஒரு காவற்துறை அதிகாரி, தன் சொந்த தேவைகளுக்கோ அல்லது உத்தியோக பூர்வ தேவைகளுக்கோ, நாட்டை விட்டு வெளியே போவதற்கு அமைச்சின் செயலாளரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

முந்தய ராஜபக்ச அரசாங்கத்தின் போது நடைபெற்ற பல குற்றச் செயல்களை முன்னாள் குற்றவியல் திணைக்களப் பணிப்பாளர் ஷானி அபயசேகராவும் நிஷாந்த சில்வாவும் மேற்கொண்டிருந்தனர்.

விசாரணையோ, அல்லது ஒழுக்காற்று நடவடிக்கையோ மேற்கொள்ளாத போது நாட்டைவிட்டுச் சென்றதற்காக சில்வா மீது நடவடிக்கை எடுக்கப்படுமென காவற்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்ற 19 வது திருத்தம் அகற்றப்பட வேண்டும் - கோதாபய ராஜபக்ச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *