புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தத் தயார் – ரணில்

Spread the love

செப்டம்பர் 18, 2019

அரசியலமைப்புச் சபையினரிடையே இணக்கம் ஏற்படும் பட்சத்தில் ஒர் வருடத்துள் புதிய அரசியலமைப்பைப் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவேன் என்று ரணில் விக்கிரமசிங்க அவரைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி தேர்தல் விடயமாக ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பிரதிநிதிகளுடன் பாராளுமன்ற வளாகத்தினுள் விசேட சந்திப்பொன்றை நிகழ்த்தினார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினவும் இச் சந்திப்பின்போது உடனிருந்தார்.

சந்திப்பைத் தொடர்ந்து டெய்லி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்காகத் தாங்கள் பல சமரசங்களைச் செய்யவேண்டியிருந்தது எனவும் அதை முன்னேற்ற வேண்டித் தொடர்ந்தும் பயணிப்பதற்குத் தயாராகவுள்ளதாகவும் த.தே.கூ. பா.உ. எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக்கொள்ள வேண்டுமென்றும், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தெரிவைப் பொறுத்த வரையில் த.தே.கூ. எதிலும் சம்பந்தப்படப் போவதில்லை எனப் பிரதமரிடம் தெரிவித்ததாக சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

ஐ.தே.கட்சியில் மூன்று வேட்பாளர்கள் இருப்பதுபோல் தெரிகிறதென்றும் அவர்கள் எல்லோருடனும் அதே வேளை இதர கட்சியினருடனும் பேஇய பின்னரே கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்படலாமென்றும் சுமந்திரன் தெரிவித்தாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email
>/center>