• Post category:Health / India
  • Post published:January 18, 2021

இந்தியாவின் விஞ்ஞான மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் 10,400 தொழிலாளர்களிடம்புகைத்தல் (கோவிட்) கேடு விளைவிக்காது! 1 கோவிட் தொற்றுத் தொடர்பாக ஒரு கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன் பெறுபேறுகளை ஆராய்ந்தபோது ஆய்வாளர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது ஒரு விடயம். அதாவது புகை பிடிப்பவர்களூக்கும், தாவர உணவை மட்டுமே உண்பவர்களுக்கும் கோவிட் தொற்றுக் குறைவாக இருந்தது.

இவ்வாய்வின்போது கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:

  • Council of Scientific and Industrial Research (CSIR) என்னும் இந் நிறுவனத்தின் அலுவலகங்கள் இந்தியா முழுவதும் பரவலாக உள்ளன. அவற்றில் 10,000 த்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். பிரதேச வாரியாக அவர்கள் வெவ்வேறு கலாச்சார, உணவுப் பழக்கவழக்க, மரபணு வேறுபாடுகளைக் கொண்டவர்கள்.
  • இவர்களில் 10.1% மானோரில் நோய்த் தொற்றுக்கு அறிகுறியாக அவர்களது உடல்களில் பிறபொருளெதிரிகள் (antibodies) காணப்பட்டன.
  • நோய்த் தொற்றுக்குப் பிறகு இவர்களின் உடல்களில் இருந்த நோயெதிர்ப்பு பிறபொருளெதிரிகள் (antibodies) நாட்கள் போகப் போக அரிதாகப் போயிருந்தாலும் சிறிதளவாவது மீதமிருந்தன. இதனால் ஒருமுறை நோய்தொற்றியவர்களுக்கு மீண்டும் நோய் தொற்றாது என்ற நம்பிக்கையும், தடுப்பு மருந்துகளை ஏற்றுவதனால் பிரயோசனமுண்டு என்ற நம்பிக்கையும் ஆய்வாளருக்கு வந்திருக்கிறது.
  • நான்கில் மூன்று பங்கினருக்கு ஒருவிதமான நோயறிகுறிகளும் காணப்படவில்லை.
  • அறிகுறிகள் காணப்பட்டவர்களில் அதிகம் பேருக்கு காய்ச்சலும் (சுரம்) நான்கில் ஒரு பங்கினருக்கு சுவை அல்லது மண இழப்பு அவதானிக்கப்பட்டது.
  • புகைப்பவர்களுக்கும், தாவர உணவை உண்பவர்களுக்கும் நோய்த் தொற்று மிகவும் குறைவாக இருந்தது.
  • பொதுப் போக்குவரத்தைப் பாவிப்பவர்களும், காவற்கடமையிலீடுபடுபவர்களும், வீட்டு வேலைக்காரர்களும், புகை பிடிக்காதவர்களும், மாமிசமுண்பவர்களும் ஒப்பீட்டளவில் அதிக தொற்றறிகுறிகளைக் கொண்டிருந்தார்கள்.
  • AB இரத்த வகையினர் பெருமளவு தொற்றுக்குள்ளாகியும், அடுத்ததாக B, O வகையினரும் A வகையைக் கொண்டவர்கள் மிகக் குறைந்த தொற்றறிகுறிகளைக் கொண்டவர்களாகவும் காணப்பட்டனர்.


புகைத்தலுக்கும், குறைவான தொற்றுக்குமிடையேயான தொடர்பு பற்றி ஏற்கெனவே சீனாவிலும், பிரான்ஸிலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.

மேற்படி இந்திய ஆராய்ச்சியின் இலக்கங்களை வைத்து மாதிரி (model) அமைத்தால் 2020 இல், இந்தியாவின் சனத்தொகையில் 100 மில்லியன் மக்கள் தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்திருக்கிறார்கள் எனக் கூற முடியும். தற்போது இது 220-300 மில்லியனாக அதிகரித்துமிருக்கலாம். உலக நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியா இத் தொற்றை மிகவும் அமைதியாகக் கடந்துபோகிறது என CSIR பணிப்பாளர் டாக்டர் அனுராக் அக்ரவால் தெரிவித்துள்ளார்.

இப்படியான ஆய்வுகளைச் செய்வதன்மூலம் நீரிழிவு, இருதய வியாதி போன்றனவற்றிற்கும் வாழ்வியல், பணியிட ஈடுபாடுகள், போக்குவரத்துகள் ஆகியவற்றின் தொடர்புகளை அறியமுடியுமெனவும், நெருக்கமாக வாழும் நகரங்கள், பணியிடங்கள் போன்றவற்றின் தொடர்புகள் பற்றி அறியமுடியுமெனவும் இவ்வாய்வுடன் தொடர்புடைய டாக்டர் செங்குப்தா தெரிவித்துள்ளார்.


Print Friendly, PDF & Email