பிள்ளையான் மீது வழக்குப் பதிய வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும்| எதிர்க்கட்சி

நான்கரை வருடங்கள் தடுப்புக் காவலில் உள்ளார்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதல்வருமான ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களைத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருப்பது பற்றி எதிர்க்கட்சி த விசனத்தைத் தெரிவித்தது.

வழக்குகள் எதுவும் பதியாது பிள்ளையான் தொடர்ந்து நான்கரை ஆண்டுகளாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என திர்க்கட்சிப் (இணைந்த) பா.உ. ஆன சுசந்தா புஞ்சினிலமே கூறினார்.

றுவான் விஜேவர்த்தன

முன்பு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் அவற்றைத் துறந்து தேசிய அரசியலில் ஈடுபடுவதை நாம் ஏற்றுக்கொண்டு விட்டோம். “பிள்ளையானின் அரசியல் கட்சியால் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வொன்றுக்கு சமீபத்தில் நான் சென்றிருந்தபோது ,பிள்ளையான் மீது வழக்குப்பதிய வேண்டும் அல்லது விடுதலைசெய்யப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் என்னிடம் கூறினார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“இது எங்களை மீண்டும் பயங்கரவாதத்துக்குத் தள்ளும் முயற்சி. இருப்பினும் நாங்கள் அப்ப்டிச் செய்யப் போவதில்லை” என உறுதியளித்தார்கள் என புஞ்சினிலமே தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் பலர் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட வேண்டும் அல்லது அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென அப் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

வழக்குத் தொடுநர் நாயகத்துடன் (attorney general) பேசி, பிள்ளையானுக்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டிருக்கிறதா என்பதைத் தீர விசாரித்து ஆவன செய்வதாக பாதுகாப்பு உதவியமைச்சர் றுவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.