பிலிப்பைன்ஸ் (மணிலாவில்) எரிமலை சீற்றம்! -

பிலிப்பைன்ஸ் (மணிலாவில்) எரிமலை சீற்றம்!

Spread the love

ஜனவரி 122, 2020

Manila Volcano, Philippine Volcano, Philippine Manila volcano photos, Manila news, Manila airport shut, indian express world news

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவை அண்மித்துள்ள தீவொன்றிலுள்ள (ரால்) எரிமலை சீற்றம் கொண்டதால் அண்மித்த பகுதிகளிலிருந்து 6000 பேர் வரையில் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இவ்வெரிமலை ஏரிக்கு நடுவில் இருப்பதால் உடனடியான பாதிப்புகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என அறியப்படுகிறது.

மனிலாவுக்குத் தெற்கே, 60 கி.மீ. தொலைவிலுள்ள, படாங்காஸ் மாகாணத்திலுள்ள ‘ரால்’ எனப்படும் சிறியதொரு எரிமலையான இதன் அழகினால் கவரப்பட்டு பல்லாயிரக் கணக்கானோர் இதைப் பார்க்க வருகிறார்கள். ஞாயிறு காலை இது திடீரெனச் சீற்றம் கொண்டது. இதன் புகையும், சிப்பிகள், பாறைகள் முதலியனவும் 15 கி.மீ. உயரத்துக்கு வீசப்பட்டதென அறியப்படுகிறது. இதனால், பாதுகாப்புக்காக், மனிலா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

இத் தீவிலுள்ள 6000 பேர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். எவரும் காயத்துக்குள்ளாகினர் என அறியப்படவில்லை.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  உலகின் அதி குள்ள மனிதர் காலமானார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *