பிலிப்பைன்ஸ் சூழல் போராளி ஜினா லோபேஸ் மரணம்! -

பிலிப்பைன்ஸ் சூழல் போராளி ஜினா லோபேஸ் மரணம்!

Spread the love

23 கனிமச் சுரங்கங்களை மூடச் செய்தவர்

பிலிப்பைன்ஸ் நாட்டின் சுற்றுச் சூழல் அமைச்சரும் சூழல் போராளியுமான ஜினா லோபேஸ் காலமானார். இறக்கும்போது அவருக்கு 65 வயது.

கனிமச் சுரங்கங்களுக்கு எதிராகப் போராடிய இவர் 2016 இல் பதவியேற்றுப் பத்தே மாதங்களில் பல கனிம, கற்சுரங்கங்களை மூடச் செய்திருக்கிறார். குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவர்களது உரிமைகளைப் பேணுதல் தொடர்பாகவும் அவர் ஒரு முன்னணிச் செயற்பாட்டாளராக இருந்திருக்கிறார்.

ஜனாதிபதி றொட்றிகோ டுரேர்டேயின் அரசாங்கத்தில் சுற்றுச் சூழல் அமைச்சராகப் பணியாற்றியபோது நிக்கல் கனிமச் சுரங்கங்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தார். 23 சுரங்கங்களை மூடியும், 5 சுரங்கங்களின் நடவடிக்கைகளை நிறுத்தியும், திறந்த குழிச் சுரங்கங்களைத் தடைசெய்தும் சூழல் பாதுகாப்பு விடயங்களில் சளைக்காத போராளியாகவும் இருந்தார். அவரது நடவடிக்கைகளுக்கு எதிராக சுரங்கத் தொழில் நிறுவனங்கள் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தன. பத்தே மாதங்களில் காங்கிரஸ் குழு அவரது நியமனத்தை நிராகரித்தது. இதைத் தொடர்ந்து பல சுரங்கங்கள் தமது நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தன. ‘இந்த பத்து மாதங்களும் தனக்கு பெரும் வலியைத் தந்த காலங்கள்’ என அவர் கூறியிருக்கிறார்.

“சுரங்கங்களினால் ஏற்படும் சூழல் சிதைவை நிறுத்துவதற்கு ஏதாவது செய்யமுடியுமென்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்”

ஜீன லோபேஸ்

“சுரங்கங்களினால் ஏற்படும் சூழல் சிதைவை நிறுத்துவதற்கு ஏதாவது செய்யமுடியுமென்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்” என அவர் உடல் நலம் மிக மோசமாக இருந்தபோதும், ஜூலை மாதம் தனது முகனூலில் குறிப்பிட்டிருந்தார்.”

அவரது உடலின் பல்வேறு உறுப்புகள் செயற்பாடுகளை இழந்தமையால் மரணம் சம்பவித்தது எனினும் அதற்கான காரணம் வெளீயிடப்படவில்லை.

“ஜினா லோபேஸ் ஒரு தலைமுறை சூழல் போராளிகளை உருவாக்கியது மட்டுமல்லாது பிலிப்பீனோ மக்களை ஒரு பொதுவான நோக்கத்திற்காக ஒன்றிணைக்கவும் செய்துள்ளார்”

பாம் அக்கீனோ
Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  ஆபிரிக்காவில் வரலாறு காணாத பட்டினி - ஐ.நா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *