Sri Lanka

பிரேமதாச கட்சியினதும் கூட்டமைபினதும் தேர்தல் அறிக்கைகளிடையே தொடர்பு இருக்கிறது – மஹிந்த ராஜபக்ச


ஜூலை 21, 2020: சமாஜி ஜன பலவேகய கட்சியின் தேர்தல் அறிக்கைக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கைக்குமிடையே ஒரு தொடர்பு இருக்கிறது போல் தெரிகிறது என, கண்டி, தெல்தெனியவில் நடைபெற்ற சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசும்போது மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

“இந் நாட்டின் மிகப் பழைய கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினை உடைத்தவர்களில் முன்னணியில் இருந்தவர் சஜித் பிரேமதாச. அப்படியானவர் நாட்டைப் பிரிக்கவும் தயங்க மாட்டார். அவர் எப்போதுமே தனது தந்தையின் திட்டங்களை நடைமுறைப்படுத்த விரும்புபவர். பிரதமர் பிரேமதாசவை நினைக்கும் போதெல்லாம் 88-89 வன்முறைகள் தான் நினைவுக்கு வருகிறது” என ராஜபக்ச அக்கூட்டத்தில் தெரிவித்தார்.

“88-89 வன்முறைகளின்போது கண்டியில் பலர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். அவ் வன்முறைகள் பற்றி நான் இப்போது உங்களுக்கு ஞாபகப்படுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன். ஏறத்தாள 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். இதனால் தான் இன்னுமொரு பிரேமதாச காலத்தை மக்கள் விரும்பவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.