Spread the love

கோவிட்-19 நோய்த்தொற்றுக்கௌள்ளான பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மோசமடைந்துள்ளதாகவும், தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் பணிகளை, வெளி விவகார அமைச்சர் தற்காலிகமாகப் பொறுப்பேற்றுள்ளார் எனவும் அறியப்படுகிறது.

பிரதமரது உடல் நிலை திடீரென மோசமடைந்ததையிட்டு அவருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்படவேண்டி ஏற்படலாம் என எதிர்பார்த்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மார்றப்பட்டுல்ளார். தற்போது அவர் நினைவு தெளிந்த நிலையிலுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

55 வயதுடைய பொறிஸ் ஜோன்சன், சாதுவான நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்ததும், நேற்று இரவு தேசிய சுகாதாரா சேவை நிர்வாகத்திலிருக்கும், செயிண்ட். தோமஸ் மருத்துவமனையில், முன்னேற்பாட்டாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நோய்த்தொற்று இருக்கிறதென்று 10 நாட்களுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது என வெளிவிவகாரச் செயலாளர் டொமினிக் றாப் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இறுதித் தரவுகளின்படி, பிரித்தானியாவில் 51,608 உறுதிப்படுத்தப்பட்ட நோய்த் தொற்றுக்களும், 5,373 மரணங்களும் ஏற்பட்டுள்ளன.


அதே வேளை, அமெரிக்காவில், 356,000 தொற்றாளர்களும், 10,000 த்துக்கும் மேலான மரணங்களும் ஏற்பட்டுள்ளன என ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஸ்பெயினில் 4,000 புதிய தொற்றுக்களும், ஒரு நாள் மரண எண்ணிக்கை 600 ஆகவும் உள்ளது. கடந்த நான்கு நாட்களாக தொற்றுக்களும், மரணங்களும் குறைவடைந்துகொண்டு வருவதாக அறிவிக்கப்படுகின்றது. இன்றய தரவுகளின்படி ஸ்பெயினில் 135,000 தொற்றுக்களும், 13,000 மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

உலக ரீதியாக 1.3 மில்லியன் தொற்றுக்களும், 73,000 மரணங்களும் ஏற்பட்டுள்ளன என ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவிக்கிறது.

Print Friendly, PDF & Email
Related:  அபூர்வமான புதிய நோயறிகுறிகளைக் காட்டும் கோவிட்-19