பிரித்தானிய மகாராணி அடுத்த வருடம் முடி துறக்கலாம். சார்ள்ஸ் அடுத்த மகாராஜா?

பிரித்தானிய வரலாற்றிலேயே மிக நீண்டகாலமாக சிம்மாசனத்தில் இருக்கும் 94 வயதுடைய எலிசபெத் மகாராணி இன்னும் 6 மாதங்களில் தனது முடியைத் துறக்கவிருப்பதாக அரச குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்களைக் குறிப்பிட்டு, பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
68 வருடங்கள் தொடர்ச்சியாக அரசியாகவிருக்கும் எலிசபெத் மகாராணிக்கு அடுத்தபடியாக அரசராகும் உரிமை 71 வயதுடைய அவரது மூத்த மகன் இளவரசர் சார்ள்சுக்கே உண்டு.
எலிசபெத் மகாராணியாருக்கு முன்னர் அவருடைய பூட்டியார் விக்டோரியா மாகாராணி 63 வருடங்கள் ஆட்சியில் இருந்தார். அதே வேளை அதி கூடிய காலம் முடிக்காகக் காத்திருக்கும் இளவரசர் என்ற பட்டமும் இளவரசர் சார்ள்சுக்குக் கிடைக்கிறது.
அடுத்த வருடம் ஏப்ரல் 21 இல் மகாராணியார் தனது 95 வது வயதை எட்டுகிறார். ஜூன் மாதம் அணிவகுப்புக்களுடன் கூடிய பாரிய அணிவகுப்பும் கொண்டாட்டங்களும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாகவும் இந் நிகழ்வின்போது அவர் தனது முடி துறப்பு பற்றி அறிவிப்பார் எனவும் அறியப்படுகிறது.
