Spread the love

பொறிஸ் ஜோன்சனின் அதிரடி அறிவிப்பு!

ஆகஸ்ட் 28, 2019

பிரித்தானிய பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும்படி பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மகாராணிக்கு விண்ணப்பம் கொடுத்துள்ளார்.

கோடை விடுமறை கழித்து பாராளுமன்றம் மீண்டும் கூடிச் சில நாட்களில் ஒத்திவைக்கப்படுவதும், அதே வேளை ‘பிறெக்சிட்’ ஆணையின் பிரகாரம் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையிலும், பிரதமரின் இந்த அறிவிப்பு நாடெங்கும் அதிர்ச்சியலைகளை எழுப்பியிருக்கிறது.

பிரித்தானிய பாராளுமன்றத்தை ஒத்திவைக்க பிரதமர் மகாராணியிடம் விண்ணப்பம்! 1
பிரித்தானிய பாராளுமன்றம் ஒத்திவைக்கபடலாம்?

ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்தவித இணக்கப்பாடும் இல்லாமல் (no-deal) பிரித்தானியா வெளியேறுவதை விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கைகளின் மூலம் அக்டோபர் ‘பிறெக்சிட்’ கால எல்லையை பின்போட வைத்துவிடலாம் என்ற அச்சத்தில் பொறிஸ் ஜோன்சன் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.

இதன் மூலம் அக்டோபர் 14 இல் மாகாராணியின் பேச்சைத் தொடர்ந்து அடுத்த 15 நாட்களுக்குள் (அக்டோபர் 31 ‘பிறெக்சிட்’ கால எல்லை) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான கால அட்டவணையைத் திட்டமிடலாம் என்பது ஜோன்சனின் திட்டம். இக் குறுகிய நாட்கள் அவகாசத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களால் ‘பிறெக்சிட்’ ஐ நிறுத்தவோ, பின்போடவோ முடியாது என்று ஜோன்சன் கருதுவதாக அறியப்படுகிறது.

இணக்கப்பட்டற்ற வெளியேறலை எதிர்க்கும் கன்சர்வேட்டிவ் பா.உ. கிறீவ், பொறிஸ் ஜோன்சனின் இந்த நடவடிக்கையை ‘விஷமத்தனமான’ வேலை என வர்ணித்திருக்கிறார்.

“பாராளுமன்றம் கூடிவிடக்கூடாது என்பதற்காக (ஜோன்சனால்) வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் நடவடிக்கை இது” என அவர் பி.பி.சி. க்குத் தெரிவித்தார்.

முன்னாள் வழக்குத் தொடுநர் நாயகமான கிறீவ், ஜோன்சனின் இந்த நடவடிக்கை “அரசியல் சாசனத்துக்கு” முரணானது எனவும் அது நடக்காதவாறு பாராளுமன்றம் பார்த்துக்கொள்ளும் எனவும் தெரிவித்தார். (பிரித்தானிய பாராளுமன்றம் அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்கியிருக்கவில்லை, எனவே தான் அப்பதம் மேற்கோட் குறிகளுக்குள் தரப்பட்டது)

“பிரதமர் முரண்டு பிடித்தாரானால் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அவரது நிர்வாகம் முடிவுக்குக் கொண்டுவரப்படும், “ என்றவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி ட்றம்ப் தரும் யோசனை - பரிசோதனைகளைக் குறைக்கும்படி உத்தரவு!