பிரித்தானிய பாராளுமன்றச் சுவரில் கார்த்திகைப் பூ ஒளிப்படம்

இன்றிரவு (நவம்பர் 27) மத்திய லண்டனில் (வெஸ்ட்மினிஸ்டர்) இருக்கும் பிரித்தானிய பாராளுமன்றத்தின் வெளிபுறச் சுவரில் “நாங்கள் நினைவுகூருகிறோம் (We Remember)” என்ற வாசகங்களுடன் கூடிய, தமிழீழத்தின் தேசியப் பூவாகிய கார்த்திகைப் பூ ஒளிப்படமாகத் திரையிடப்பட்டது.

OLYMPUS DIGITAL CAMERA

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றியதன் மூலம் தம் இன்னுயிர்களைத் துறந்த மாவீரர்களை நினைவு கூருவதற்காக பிரித்தானிய தமிழர்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள்.

கோவிட் தொற்றுக் காரணமாக வழமைபோல் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தமுடியாமல் போனதால் சில பிரித்தானிய தமிழீழ செயற்பாட்டாளர்களில் ஒருவரும், இந் நிகழ்ச்சியை ஒழுங்குசெய்தவர்களில் ஒருவருமான மாலதி குறிப்பிட்டார். (தமிழ் கார்டியன்)