World

பிரித்தானிய தேர்தல்: உமா குமரன் வெற்றியும் அப்புவின் தோல்வியும்

‘அப்பு’ அவசரப்பட்டு வைத்த பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தல் எதிர்பார்த்த முடிவுகளைத் தந்திருக்கிறது. அமெரிக்க கார்ட்டூன் நிகழ்ச்சியான ‘சிம்பஸன்ஸ்’ இல் வரும் ‘அப்பு’ பாத்திரத்தோடு நம்ம ரிஷி சூனாக்கை ஒப்பிட்டதற்கு யாரும் கோபிக்கமாட்டீர்களென்று நினைக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடிய பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உஷால் டொசாஞ் என்றொரு சீக்கியக் கனடியர் என்.டி.பி. கட்சி சார்பில் எதேச்சையாக முதலமைச்சராகினார். அப்போது ஒரு பத்திரிகையில் வந்த கார்ட்டூன் ” here goes another job that Canadians do not want” என்ற தலைப்பைக் கொண்டிருந்தது. பெரும் சமூகத்தினர் வேண்டாத வேலைகள் தான் ‘இமிகிரண்ட்ஸ்’ இற்குப் போகிறது என்பதுவே இதன் பின்னாலுள்ள நையாண்டி. ‘அப்பு’வை இழுத்ததன் காரணம் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

‘அப்பு’ என்ன எண்ணத்தில் தேர்தலைத் தீர்மானித்தாரோ தெரியவில்லை. அவரும் அவரது கட்சியும் படு தோல்வியடையப் போகிறதென்று அனைத்து கருத்துக் கணிப்புகளும் கூறிய பிறகும் அவர் தேர்தலை நடத்தியதன் மர்மம் இப்போ சாடை மாடையாகத் துலங்க ஆரம்பித்திருக்கிறது. அதுக்கு ஏன் உமா குமரனை இதுக்குள் இழுக்கிறீங்க என்பது துலங்காத மர்மமாக இருக்கலாம். பொறுமை காத்தருள்க.

14 வருடங்கள் ஆட்சியிலிருந்த கன்சர்வேட்டிவ் கட்சி இப்போ மண் கவ்வியிருப்பதற்கு தொழிற்கட்சியின் சாதனைகள் காரணமில்லை. உலகமெங்கும் பரவலாக செயற்பட்டுவரும் ஒரு மர்மவிசையின் செயல்தான் இதுவும். தொழிற்கட்சியில் இருக்ககூடிய மிகச்சிறந்த – நல் மனமுள்ள – அரசியல்வாதியான ஜெரெமி கோர்பினை வெளியில் போட்டுவிட்டு கியெர் ஸ்ராமர் என்பவரைத் தொழிற்கட்சியின் தலைவராக்கியமைக்கும் மத்திய கிழக்கில் இருக்கும் ‘தலைமைச் செயலகத்திற்கும்’ உறவொன்றும் இல்லையென நினைக்கத் தேவையில்லை. முன்னாள் தலைவர் ஜெரெமி கோர்பின் பகிரங்கமாக பாலஸ்தீனத்தை ஆதரித்து வரும் ஒருவர். அவரது காலத்தில் கட்சிக்குள் யூதர்களுக்கு எதிரான (அன்டிசெமெட்டிக்) கருத்து பலமாக இருந்தது என்பதைக் காரணம் காட்டி புதிய தலைவரும் யூதருமான கியெர் ஸ்ராமர் அவரைக் கட்சியிலிருந்து விலக்கியிருந்தார். எதிலும் மனம் தளராத ஜெரெமி இம்முறை அவரது இஸ்லிங்டன் வடக்கு தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றிபெற்றிருக்கிறார். இதையெல்லாம் நான் சொல்ல வந்தது கியர் ஸ்ரார்மர் ஒரு தான் தோன்றியல்ல அங்கு, அதே மர்ம விசையினால் அமர்த்தப்பட்டவர் என்பதைக் கூறவே.

பாலஸ்தீன விவகாரம் இந்த மர்ம விசையை முடுக்கிவிட்டிருக்கிறது. 1902 இல் எழுதப்பட்டதாகக் கூறப்படும் சயோனிஸ்ட் ப்ரொட்டோகோல் என்னும் வக்கணைத் தொகுதியில் குறிப்பிட்டுள்ளபடி இப்போது உலக விவகாரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன் என்பது பலரும் அறிந்தது. அதற்கு எதிராக உலகம் முழுவதும் தீவிர வலதுசாரீயம் மீண்டெழுவதும் தற்செயலான காரியமல்ல.

இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரில் நம்ம ட்றூடோவைப் போலவே ‘அப்பு’வும் யூத பாசத்தால் பாதங்களைக் கழுவிப் பார்த்தவர்கள் தான். ஆனாலும் “நீங்க வேறு ஆளய்யா, நாங்க வேறு ஆளையா” என்றபடி ஒருவரைக் கவிழ்த்தும் மற்றவரைக் கவிழ்க்கத் துடித்துக்கொண்டும் இருக்கிறார்கள் யூதர்கள். கியர் ஸ்ராமரின் வெற்றி ஒரு நீண்டகாலத் திட்டத்தின் வெளிப்பாடு. பாலஸ்தீன விவகாரத்தில் சிலவேளை ‘அப்பு’ நடுநிலையைப் பேணியிருந்தால் கொஞ்சம் அதிக ஆசனங்கள் கிடைத்திருக்குமோ என்னவோ.

பாலஸ்தீனத்தில் நடப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதைவிட செத்துப் போகலாம். என்னைப் போலச் சிந்திக்கும் பலர் இருக்கிறார்கள். கனடாவில் தமிழரது இரண்டாவது எம்.பி. கரி ஆனந்தசங்கரி பாலஸ்தீனம் பற்றி வாயைத் திறக்கவில்லை என துடி துடிப்பான (எங்கள்) இளசுகள் கொஞ்சம் அவரைத் துரத்திப் பார்த்தனர். 9 மாதங்கள் முடிந்தும் இன்னும் எம்.பி. வெற்றிகரமாகக் கரந்துறைகிறார். அவருடைய நிலைப்பாடு, கட்சியின் நிலைப்பாடு, தலைவரின் நிலைப்பாடு என எல்லாமே கரியை இக்கட்டான நிலைக்குள் வைத்திருக்கின்றன என்பது எந்தவொரு குஞ்சு குருமானுக்கும் தெரியும். ஆனால் அதே மெளன விரதத்தை இதர மனித உரிமைகள் விடயத்திலும் அவர் கடைப்பிடித்தால் அவர் ஒரு நாணயஸ்தர் என்ற அந்தஸ்தை எட்ட முடியும். இவ்விடயத்தில் கனடாவில் இருக்கும் அடுத்த நிலை தமிழ் அரசியல்வாதிகள் கரியை விட ஒருபடி மேல். அவர்களைப்பற்றி எழுத இப்பக்கம் போதாது. கரி ஆனந்தசங்கரியைப் போலவே ஸ்ராமரும் மனித உரிமைகளைப் பேசி அரசியலுக்கு வந்தவர் தான். ஆனால் பாலஸ்தீனியர்கள் மனிதர்கள் இல்லை என்ற இவர்களின் நிலைப்பாட்டின் பிரகாரம் மனித உரிமைகளைப் பேச இவர்களுக்கு அருகதை உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

உமா குமரனின் கதையும் அதிக வித்தியாசங்களைக் கொண்டதல்ல. இவரது பெற்றோர்கள் குடிவரவு வழக்கில் வெற்றிபெற ஜெரெமி கோர்பின் பல உதவிகளைச் செய்திருந்தார் என விக்கி கூறுகிறது. ஆனாலும் கோர்பினைக் கட்சியிலிருந்து விலக்கியபின்னரும் உமா ஸ்ரார்மருடன் ஒட்டிக்கொண்டது அவர் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாக மிளிர்வார் என்பதைக் கட்டியம் கூறிவிட்டது. உமாவின் அரசியல் வரவு தற்செயலானது அல்ல, அவரது ஆசைகள் அபிலாட்சைகள் மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு வளர்க்கப்பட்டவை என்பது மிகத் தெளிவாகவே தெரிகிறது. எல்லா அரசியல்வாதிகளைப் போலவும் இவரும் மனித உரிமைகளை ஒரு கருவியாக அல்லது ஏணியாகவே பாவித்திருக்க வாய்ப்புண்டு. அதுவே அரசியல்வாதியின் பண்பு. அதை நான் குறையாக எடைபோடவில்லை. 2013 இல் உமா குமரன் ஹரோ கிழக்கு தொகுதியில் தொழிற்கட்சி சார்பாகப் போட்டியிட்டபோது பிரித்தானியாவில் ‘சாதி வேறுபாடுகளைக் களையவேண்டுமென’ முழக்கமிட்டவர். அந்த தடவை அவர் கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரிடம் தோற்றதற்கு இதுவும் ஒரு காரணமெனக் கூறப்படுகிறது. இப்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ட்றாட்ஃபோர்ட் அண்ட் போ தொகுதியில் அவர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். இங்கிலாந்தில் என்ன ‘சாதிப் பிரச்சினை’ ? என்று நீங்கள் தலையில் கையை வைக்கலாம். இங்கிலாந்து இப்போது வெள்ளையர்கள் நாடல்ல. அது இப்போது இந்தியாவின் காலனியாக மாற்றப்பட்டு வருகிறது என்பதற்கு இந்த தடவை தேர்தலில் 26 இந்தியர்கள் பாராளுமன்றத்தில் அமரப் போகிறார்கள் என்பதே சாட்சியாகும். 13 இலங்கையர்களும் இந்தத் தடவை போட்டியிட்டு அதில் உமா குமரன் மட்டுமே வெற்றி பெற்றவர் என்பது இன்னுமொரு புள்ளி விபரம்.

2011 இல் கனடாவில் முதன் முதலாக ராதிகா சிற்சபைஈசன் என்ற தமிழ்ப் பெண் ஒருவரைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பும் பணியில் மிகவும் அர்ப்பணிப்போடு செயற்பட்டவர்களில் ஒருவன் என்ற வகையில் உமாவின் எழுச்சியைக் கொண்டாடுபவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடியதாகவிருக்கிறது. பிரிதானிய பாராளுமன்றத்தில் உலாவரப்போகும் முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்பது பெரும் சாதனை. உமாவைப் பற்றி அங்குள்ள நீண்டகால தமிழ்ச் செயற்பாட்டாளரிடம் கேட்டபோது “she is a committed person, we shall wait and see” எனப் பதில் தந்தார்.

உமா குமரனின் பலவருட அயராத உழைப்பின் பலனே அவரது வெற்றிக்கு காரணம். செயற்பாட்டாளராக இருக்கும் வரை ஒருவருக்கு அறமே ஆயுதம். அரசியல்வாதியாக மாறியதும் அவர் அந்த ஆயுதத்தைக் கழைந்துவிடவேண்டுமென்பது தான் இன்றைய உலக நியதி. கனடிய தமிழ் அரசியல்வாதிகள் இதனையே எமக்குக் கற்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் உமா குமரனையும் இன்னுமொரு அரசியல்வாதியாகவே நான் பார்க்கிறேன். “விடுதலைப் புலிகளைப் பற்றி நான் முன்னர் கொண்டிருந்த நிலைப்பாட்டை இப்போது மாற்றியிருக்கிறேன்” என்ற தளபதியின் வரிகளை மீளவும் ஒப்புவிக்காவிடால் சரி. உமாவின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.