Spread the love

கொரோனாவைரஸ் தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து ஒரே நாளில் அதிகபட்ச கோவிட்-19 மரணங்களை பிரித்தானியா இன்று எட்டியுள்ளது. இது இத்தாலி, ஸ்பெயினை விட அதிகமாகும்.

மருத்துவமனைகளில், கடந்த 24 மணித்தியாலங்களில் 980 க்கும் அதிகமானவர்கள் மரணித்திருக்கிறார்கள். இது நாட்டின் மொத்த இறப்பினை 8,958 ஆக உயர்த்தியுள்ளது.

1,417 ஒருநாள் மரணங்களோடு, பிரான்ஸ், ஐரோப்பிய நாடுகளில் முன்னணியில் இருக்கிறது. இது பிரான்சின் நெடுநாட் பாராமரிப்பு நிலையங்களில் ஏற்படும் மரணங்களயும் உள்ளடக்கியதாகும்.

அதியுச்ச மரணங்களைக் கண்ட ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியும் ஸ்பெயினும் தற்போது உச்சத்தைத் தாண்டிவிட்டன.

“இந்த ஒவ்வொரு இலக்கத்தின் பின்னாலும் ஒரு பெயர் இருக்கிறது, ஒரு குடும்பம் இருக்கிறது. அதன் வாழ்வு ஒருபோதும் முன்னையதைபோல இருக்கப்போவதில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என சுகாதாரச் செயலாளர் மற் ஹனொக் தெரிவித்தார்.

இங்கிலாந்து இறப்புக்களை வித்தியாசமாகக் கணக்கெடுக்கிறது. அது மருத்துவ மனை இறப்புக்களைத் தனியாகவும், வெளியில், குறிப்பாக நெடுநாட் பராமரிப்பு நிலையங்களில் ஏற்படும் இறப்புக்களைத் தனியாகவும் கணிக்கிறது.

இங்கிலாந்தில் லண்டன் நகர் 249 மரணங்களை எதிர்கொண்டு, நாட்டின் மிக மோசமான இழப்பைச் சந்தித்திருக்கிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற மரணங்களில்இறந்தவர்கள் 27 வயது முதல் 100 வயதுவரை வேறுபடுகிறார்கள்.

இதுவரை 10 தேசிய சுகாதாரச் சேவையில் பணிபுரிந்த மருத்துவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். டாக்டர் பயாஸ் அயாச்சே தனது பணியிலிருந்தும் ஓய்வு பெற்றிருந்தவர், மீண்டும் பகுதி நேரமாகப் பணிபுரிய வந்தவர். மூன்று வாரங்களுக்கு முன்னர் வரை பணி புரிந்தார். சிரிய அகதிகளின் நல்வாழ்வுக்காகத் தொண்டராகப்பணியாற்றியவர். புதனன்று அவரைக் கோவிட்-19 குடிகொண்டு விட்டது.

இதே போன்று சில நாட்களுக்கு முன்னர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் அன்ரன் செபஸ்தியாம்பிள்ளை கின்ஸ்டனில் , கோவிட்-19 நோய்க்கு மரணமாகியிருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்னரே அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

டாக்டர் அயாச்சி மாதிரி இன்னும் 9 மருத்துவர்கள் இக் கொள்ளைநோய்க்குப் பலியாகியிருக்கிறாரகள். அவர்கள்:

  • அப்துல் மாபுட் சவுத்ரி, சிறுநீரக வியாதி நிபுணர், சமீபத்தில் அதிக பதுகாப்பு உபகரணங்கள் வேண்டிப் பிரதமரிடம் மன்றாடியவர்.
  • சாமி ஷொய்ஷா, பிரித்தானிய- எகிப்தியர், கடந்த 40 வருடங்களாக பணி புரிந்து வந்தவர்.
  • எட்மண்ட் அடிடெஜி, ஒரு A&E மருத்துவர்.
  • சாயிட் ஹெய்டெர், பாகிஸ்தான் / பிரித்தானியர், ஓய்வு பெற்றிருந்தவர்
  • அன்ரன் செபஸ்தியாம்பில்லை, முதியோர் மருத்துவ ஆளோசகர், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இரன்உ வாரங்களுக்கு முன்னர் கிங்ஸ்டன் மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
  • அல்பா சாது , ஒய்வு பெற்ற மருத்துவர். னைஜீரியாவைச் சேர்ந்தவர்.
  • அம்ஜெட் எல்-ஹவ்ரானி. சூடானைச் சேர்ந்த ENT நிபுணர்
  • ஏடில் எல்.தயார் , சூடானைச் சேர்ந்த ஒரு அறுவைச் சிகிச்சை நிபுணர். தொண்டராகப் பணியாற்றினார்.
  • ஹபிப் ஜெய்டி 76, பூர்வீகம் பாகிஸ்தான்.
Related:  மொன்றியல் | சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் பாதிப்பு அதிகம் - ஆய்வு

இவர்களைப் போன்று மேலும் பல முன்னணிச் சுகாதார சேவைப் பணியாளர் மரணமாகியிருக்கிறார்கள்.

Print Friendly, PDF & Email