பிரித்தானியா | பொறிஸ் ஜோன்சனுக்கு வெற்றி உறுதி -

பிரித்தானியா | பொறிஸ் ஜோன்சனுக்கு வெற்றி உறுதி

Spread the love
வாக்களித்தோர் தகவலின் படி பெரும்பான்மை நிச்சயம்

லண்டன், டிசம்பர் 12, மாலை 11 மணி

The result of the 2019 election exit poll
2019 தேர்தலில் வாக்களித்தோரின் கருத்துக் கணிப்பு

பிரித்தானியாவில் இன்று நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மையுடன் வெல்லவதற்கான சாத்தியங்கள் உண்டென அங்குள்ள ஊடகங்கள் மேற்கொண்ட ‘வாக்களித்தோர் வாக்குமூலங்கள்’ (exit poll) மூலம் தெரிய வருகிறது.

‘ஸ்கை நியூஸ்’, ‘பி.பி.சி.’, ‘ஐ.ரி.வி.’ ஆகிய மூன்று செய்தி நிறுவனங்களின் சார்பில் ‘ ‘இப்சோஸ் மோறி’ ( Ipsos MORI) எனும் கருத்துக் கணிப்பு நிறுவனம் இவ் வாக்கெடுப்பை நிகழ்த்தியிருந்தது. இதன் பிரகாரம் கன்சர்வேட்டிவ் கட்சி 368 ஆசனங்களையும், தொழிற் கட்சி 191 ஆசனங்களையும், ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி 55 ஆசனங்களையும், லிபெரல் ஜனநாயகக் கட்சி 13 ஆசனங்களையும் பெறலாமென எத்ரிவுகூறப்பட்டுள்ளது.

பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க 325 ஆசனங்களே தேவைப்படுகின்றன.

ஜெரெமி கோர்பின் தலைமையிலான தொழிற்கட்சி, பல தசாப்தங்கள் காணாத தோல்வியைப் பெறலாமெனவும் அவர் கட்சியின் தலைமைப் பதவியைத் துறக்கவேண்டி ஏற்படலாமெனவும் அறியப்படுகிறது. 2017 ஜூன் தேர்தலில் ஜெரெமி கோர்பினின் தலைமையில், தொழிற் கட்சி 262 ஆசனங்களைப் பெற்றிருந்தது.

இக் கருத்துக்கணிப்பின்படி ஆசனங்கள் பெறப்படுமானால், பொறிஸ் ஜோன்சன் 86 அதிக ஆசனங்களுடன் ஆட்சியமமைப்பார் எனவும் அவரது கனவான ‘பிறெக்சிட்’ நிச்சயம் நனவாகுமென எத்ரிபார்க்கலாம். எதிர்வரும் ஜனவரி 31 அன்று பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான இறுதித் திகதியாக நிணயிக்கப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இனிமேல் எத்தடையுமில்லாது ‘பிறெக்சிட்’ டுக்கான அங்கீகாரம் கிடைத்துவிடும்.

சமீப காலங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகள் காரணமாக ஏராளமான புதிய குடிவரவாளர்கள் பிரித்தானியாவிற்குள் வதிவிடங்களை அமைத்துள்ளனர். இதனால் வேலை வாய்ப்பு, கலாச்சாரப் பாதிப்பு, பயங்கரவாதம் என மக்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *