News & AnalysisWorld

பிரித்தானியா | பேசிங்ஸ்ரோக் & டீன்பொறோ கவுன்சிலராக ஜெய் கணேஷ் தெரிவு

மே 6, 2021 இல் நடந்து முடிந்த பிரித்தானிய உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பேசிங்ஸ்ரோக் & டீன்பொறோ கவுன்சிலின், ஷேர்போர்ண் செயிண்ட் ஜோன் & ரூக்ஸ்டவுண் வட்டாரத்தின் பிரதிநிதியாக, ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெய் கணேஷ் தெரிவாகியுள்ளார்.

பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தெரிவாகிய மூவரில் ஜெய் கணேஷும் ஒருவர்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜெய் கணேஷ் யாழ். செயிண்ட் பட்றிக்ஸ் கல்லூரி, கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு, லண்டன் மெற்றோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் சுற்றுலா நிர்வாகத்தில் பட்டக்கல்வியை முடித்துக்கொண்டு கடந்த 10 வருடங்களாக உள்ளூராட்சி சபையில் பணியாற்றி வந்தார். அதே காலப் பகுதியில், பகுதிநேர வேலையாக இலங்கை சுற்றுலாச் சபையின் லண்டன் அலுவலத்தில் கீழ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றினார்.

2012 முதல் கன்சர்வேட்டிவ் கட்சியின் அங்கத்தவரான ஜெய் கணேஷ், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரியவேண்டும் என்ற அணியில் இணைந்து பிரதமர் பொறிஸ் ஜோன்சன், மைக்கேல் கோவ் ஆகியோருடன் ‘பிறெக்சிட்’ பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். (நியூஸ் வயர்)