World

பிரித்தானியா: தமிழ் வாக்குகளைத் தேடி ஓடும் கன்சர்வேட்டிவ் கட்சி

எதிர்வரும் ஜூலை 04 அன்று பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலை நடத்தப்போவதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சூனாக் அவர்கள் விடுத்த திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து கன்சர்வேட்டிவ் அரசின் வெளிவிவகார அமைச்சர் சேர் டேவிட் கமெறோன் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு வலையொளி ஒன்றின் மூலம் விசேட அறிவிப்பொன்றைச் செய்துள்ளார்.

பிரித்தானிய நாட்டிற்குத் தமிழ் மக்கள் அளித்துவரும் பெரும் பங்கைச் சிலாகித்துப் பேசியுள்ளதுடன் இறுதிப் போரின்போது அவர்கள் அனுபவித்த துயரங்களை 15 வருடங்களின் பின்னர் தான் நினைவுகூர்வதுடன் சகல மக்களுக்கும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களில் நீதி கிடைக்க வலியுறுத்துவதோடு இவ்விடயத்தில் தனது அரசு தொடர்ந்து உழைக்கும் என உறுதி கூறியுள்ளார்.

1948 இல் இலங்கை சுத்தந்திரமடைந்ததற்குப் பின்னர் வடக்கிற்குச் சென்ற (2013) ஒரே ஒரு பிரித்தானிய பிரதமர் தானே என்பதை அவர் இவ்வலையொளியில் நினைவுபடுத்தினார்.

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு ஒரு ராஜதந்திர ரீதியிலான முடிவொன்றைக் கொண்டுவரத் தன் அரசு இரட்டிப்பு முயற்சிகளை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

வலையொளி: தமிழ் கார்டியன்.