பிரித்தானியா | அறுதிப் பெரும்பான்மையுடன் பொறிஸ் ஜோன்சன் வெற்றி! -

பிரித்தானியா | அறுதிப் பெரும்பான்மையுடன் பொறிஸ் ஜோன்சன் வெற்றி!

Spread the love
தகவல்: பி.பி.சி.

நேற்று நடந்து முடிந்த தேர்தலில் பொறிஸ் ஜோன்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 365 ஆசனங்களைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது. ஜெறெமி கோர்பின் தலைமை தாங்கிய பிரதான எதிர்க்கடசியான தொழிற்கட்சி 59 ஆசனங்களை இழந்து 203 ஆசனங்களை மட்டுமே பெற்றிருக்கிறது.

நேற்று Ipsos MORI நிறுவனம் வெளியிட்ட வாக்களித்தோர் கருத்துக்கணிப்பின்படி 368 ஆசனங்களைக் கன்சர்வேட்டிவ் கட்சி பெறுமென எதிர்வு கூறியிருந்தது.

பொத்தம் 650 ஆசனங்களைக் கொண்ட பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் முழுத் தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது.

தொழிற்கட்சித் தலைவர் ஜெரெமி கோர்பின் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். தேர்தல் தோல்விக்கு மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்ட அவர், இத் தேர்தலை ‘பிறெக்சிட்’ மட்டுமே முடிவெடுத்திருக்கிறது என அவர் தெரிவித்திருக்கிறார்.

இன்று காலை பொறிஸ் ஜோன்சன் மகாராணியைச் சந்தித்து அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான அங்கீகாரத்தைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று அதிகாலை வெஸ்ட்மினிஸ்டரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜோன்சன், நடந்து முடிந்த ‘அரசியல் பூகம்பத்தில்’ தொழிற்கட்சியின் ஆதரவுக் கோட்டைகளே தகர்ந்துவிட்டன என்று தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியமும், ஜேர்மனி போன்ற இதர ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் ஜனவரியில் நடைமுறைக்கு வரும் ‘பிறெக்சிட்’ சுனாமியால் வரப்போகும் அழிவுகளைக் குறைக்க அவசர சந்திப்புகளை நிகழ்த்துகிறார்கள்.

ஈழத் தமிழரைப் பொறுத்தவரை ‘பிறெக்சிட்’ பாரிய பின்னடைவுகளைக் கொண்டுவருமென எதிர்பார்க்கத் தேவையில்லை.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *