Sri LankaUS & Canada

பிரம்டன் நகரசபை | முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்துக்கு மாற்றுத் திட்டம்


கனடாவின் பிராம்டன் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக பிரம்டன் வாழ் சிங்கள மக்கள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பெப்ரவரி 24, 2021 அன்று பிரம்டன் நகரசபையில் நடைபெற்ற கூட்டமொன்றில் சிறீலங்கா-கனடா அசோசியேசன் பிறம்டன் என்ற சங்கத்தின் சார்பில் சேனா முனசிங்கா என்பவர் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இணையவழியாக நடைபெற்ற இக்கூட்டத்தில் 5 நிமிடங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அவரது விளக்கக்காட்சியுடனான கருத்துப்பரிமாறல்களைச் செவிமடுத்த நகரபிதா பற்றிக் பிரவுண், கவுன்சிலர்கள் மெடிறோஸ், சிங் ஆகியோர் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைப்பதற்கான காரணங்களையும், தேவையயும் பற்றி மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்தினர்.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை வலியுறுத்திய நகரபிதா, அது தொடர்பாக கனடாவின் நிலைப்பாடுகளை மீண்டும் ஞாபகப்படுத்தினார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட நினைவுச்சின்னம் தொடர்பாக கவுன்சிலர் மெடிறோஸ் தெரிவித்த கருத்துக்கு, “அது ‘அமைதிச் சின்னமாக’ மீண்டும் கட்டப்படும் என முனசிங்க தெரிவித்தார். முனசிங்காவின் அமைப்பிற்கும் இலங்கை தூதுவரலுவலத்துக்கும் ஏதும் தொடர்புகளுண்டா என நகர பிதாவும், கவுன்சிலர் சிங்கும் முனசிங்காவிடம் கேட்டார்கள். இலங்கை தூதரகம் முள்ளிவாய்க்கால் நினைவுச்சிந்னம் அமைப்பதை எதிர்த்து நகரசபைக்கு எழுதிய கடிதத்துக்கும் முனசிங்காவின் தரவுகளுக்கும் ஒற்றுமை இருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினர்.