பிரம்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி – ஆதரவு வழங்குமாறு நகரபிதா பற்றிக் பிரவுண் கோரிக்கை
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அரசாங்கத்த்தின் உதவியுடன் பல்கலைக்கழக நிர்வாகம் இடித்தழித்ததைத் தொடர்ந்து கனடாவில் நிரந்தரமான நினைவுத்தூபியொன்றை அமைக்க கனடாவாழ் தமிழர் சமூகம் முயற்சியொன்றை எடுத்திருந்தது.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள பெரு நகரங்களில் ஒன்றான பிரம்டன் நகரில் இன் நினைவுத்தூபியை நிறுவுவதற்கான இடமொன்றை ஒதுக்கித் தருவதாக நகரபிதா பற்றிக் பிரவுண் உறுதியளித்திருந்தார். பிரம்டன் தமிழ்ச் சங்கம் மற்றும் பிரம்டன் தமிழ் முதியோர் சங்கம் ஆகியன இம் முயற்சிக்கு உந்துகோலாகவிருந்தன.
பிரம்டன் நகரின் பிரதான பூங்காக்களில் ஒன்றான சிங்கூசி பூங்காவில் இன் நினைவுத் தூபிக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் வருகின்ற தைப்பொங்கல் நாளன்று இதற்கான ஆரம்பவிழா நடைபெறவுள்ளதென்றும் இதற்கு அனைவரையும் ஆதரவு தரும்படியும் நகரபிதா பிரவுண் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். (காணொளி கீழே)