பிரம்டனில் இரண்டு குழந்தைகள் கொலை | தந்தை கைது! -

பிரம்டனில் இரண்டு குழந்தைகள் கொலை | தந்தை கைது!

கொலைக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை

நவம்பர் 7, 2019

கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் தந்தை எட்வின் பாஸ்ரிடாஸ் (52)

பிரம்ப்ரன், ஒன்ராறியோ, கனடா: ஒன்பது மற்றும் பன்னிரண்டு வயதுடைய இரு பிள்ளைகளைக் கொன்ற குற்றத்திற்காக அவர்களின் தந்தையார் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதனன்று, குழந்தைகள் இருவரும் கொலை செய்யப்பட்ட நிலையில் ஹிபேர்ட்டன் கிறெசெண்ட்டிலுள்ள அவர்களது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

52 வயதுடைய எட்வின் பாஸ்ரிடாஸ் கைது செய்யப்பட்டு பிணையை எதிர்பார்த்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணங்கள் பற்றி இதுவரை எதுவும் வெளியிடப்படவில்லை.

ஜொனதன் பாஸ்ரிடாஸ் 12, இடம், மற்றும் நிக்கொலஸ் பாஸ்ரிடாஸ், 9

நிகொலஸ் பாஸ்ரிடாஸ் (9), ஜொனதன் பாஸ்ரிடாஸ் (12) இருவரும் அவர்களது தாயார், தந்தையார், மற்ற்மொரு உறவினருடன அவ் வீட்டில் வசித்து வந்ததாகத் தெரிகிறது. குழந்தை ஜொனதனுக்கு ஆட்டிசம் குறைபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.

பாஸ்ரிடாஸ் குடும்பம் அமைதியாக வாழ்ந்த ஒன்று எனவும், பிரச்சினைகளுக்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை எனவும் அயலவர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

கொலை விசாரணை தொடர்ந்தும் நடைபெர்றுக்கொண்டிருக்கிறது.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *