"பிரதமர் மோடி நன்றாக ஆங்கிலம் பேசுவார்" - டொனால்ட் ட்ரம்ப் -

“பிரதமர் மோடி நன்றாக ஆங்கிலம் பேசுவார்” – டொனால்ட் ட்ரம்ப்

பிரான்ஸ்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது மிக நெருங்கிய நண்பர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் நேற்று ஜி7 உச்சி மாநாட்டின் பக்க நிகழ்வொன்றில் சந்தித்துப் பேசினர். சந்திப்பைத் தொடர்ந்து அவர்கள் ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

இச் சந்திப்பின்போது, ட்ரம்ப் ஆங்கிலத்தில் பேசினாலும் மோடி ஹிந்தியில் பேச மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மோடி ஹிந்தியில் “நான் நினைக்கிறேன் நீங்கள் எங்கள் இருவரையும் தனியே பேச அனுமதிக்க வேண்டும். தேவையேற்படும்போது என்ன பேசப்பட்டது என்பதை நாங்கள் அறியத் தருவோம்” என்றார்.

அப்போது டொனால்ட் ட்ரம்ப் பிரதமர் மோடியின் முதுகைத் தட்டி ” அவர் நன்றாக ஆங்கிலம் பேசுவார், இப்போது பேச அவர் விரும்பவில்லை” எனக் கூறிவிட்டுச் சிரித்தார். இருவரும், கூடவே ச்பையினரும் சேர்ந்து சிரித்தனர்.

ஜி7 மாநாட்டு பக்க நிகழ்வில் பேசும்போது அமெரிக்க ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும்
நன்றி: படம்: காணொளி இந்தியா டுடே

தனது அமெரிக்க நண்பரின் வார்த்தைகளால் மகிழ்ந்த பிரதமர் மோடி ட்ரம்பின் கைகளைப் பிடித்துக் குலாவினார்.

அதற்கு ட்ரம்ப், தானும் மோடியும் முதல் நாள் இரவு காஷ்மீரைப் பற்றிப் பேசியதாயும், இந்தியாவும் பாகிஸ்தானும் தம்மிடையே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய விடயம் அதுவென்று தான் உணர்வதாகவும் ஊடகவியலளருக்குக் கூறினார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  நகரசுத்தித் தொழிலாளர் இறப்பில் தமிழ்நாடு முதலிடம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)