பின்லாந்தில் கரையொதுங்கிய அதிசய 'பனிக்கட்டி முட்டைகள்' -

பின்லாந்தில் கரையொதுங்கிய அதிசய ‘பனிக்கட்டி முட்டைகள்’

Spread the love
இயற்கையின் கண்காட்சி

காலநிலையின் பணிப்பிற்கிணங்க அலைகளால் செதுக்கப்பட்ட இந்த அற்புத பொருட்களை இயற்கை காட்சிக்கு வைத்திருக்கிறதா? புதினம் தான்.

பின்லாந்தின் கடற்கரையொன்றில் ஆமை முட்டைகளைப் போலத் தோற்றமளிக்கும் அதிசயமான ‘பனிக்கட்டி முட்டைகள்’ கரையொதுங்கியுள்ளன.

தன்னார்வப் படப்பிடிப்பாளர் றிஸ்ரோ மற்றிலா தன் மனைவியுடன் ஹைலுவோட்டோ தீவின் கடற்கரையில் உலா வந்தபோது இந்த அதிசயத்தைக் கண்டார். ஹைலுவோட்டோ தீவு பின்லாந்திற்கும் சுவீடனுக்குமிடையே இருக்கிறது.

“வெப்பநிலை -1பாகை செல்சியஸ் (32பாகை F), காற்று சுழற்றியடித்துக்கொண்டிருந்தது. கரையில் இந்த அதிசயமான ‘முட்டைகள்’ குவிக்கப்பட்டிருந்தன” என மற்றிலா பி.பி.சி. க்குக் கொடுத்த பேட்டியொன்றில் தெரிவித்தார்.

ஒரு கோழி முட்டைக்கும் உதை பந்துக்குமிடையில் உள்ள பல அளவிகளில் முட்டைகள் இருந்தன. சுமார் 200 அடி தூரத்துக்குக் கரையில் இம் முட்டைகள் ஒதுங்கிக் கிடந்தன என்றார் மற்றிலா.

பனிக்கட்டி முட்டைகள் கரையொதுங்குவது இதுதான் முதல் தடவையல்ல எனினும் இந்தளவு தொகையாக ஒதுங்கியிருப்பது இப்போதுதான் என அயலிலுள்ள நகரத்தில் வசிக்கும் ரார்ஜா ரறெஞெஃப் சீ.என்.என். ஊடகத்திற்குத் தெரிவித்தார்.

மிதந்து வரும் னிக்கட்டித் தகடுகள் அலைகளால் உடைக்கப்பட்டு தமக்குள் மோதி இந்த உருவத்தை எடுக்கின்றன. அலை அவற்றைக் கரைகளில் ஒதுக்குகிறது. வெப்பம் உருகுநிலையில் இருக்கும்போது இது பொதுவான நிகழ்வு என பி.பி.சி.யின் காலநிலை அவதானி ஜோர்ஜ் குட்ஃபெலோ தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  அவுஸ்திரேலியா எரியும்போது அதன் தண்ணீர் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை!