பிந்திய செய்தி: பாதுகாப்பு படையினரால் பலவந்தமாக அகற்றப்படும் அரகாலயர்கள்

ஊடகவியலாளர் மீதும் தாக்குதல்

இந்று அதிகாலை 1:30 முதல் காலிமுகத் திடலில் குழுமியிருந்த அரகாலய ஆர்ப்பாட்டக்கார்களைப் பாதுகாப்பு படையினர் வன்முறையைப் பாவித்து அங்கிருந்து பலவந்தமாக அகற்றிவருவதாகச் செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அரகாலயர்கள் தங்கியிருக்கும் வாடிகள் அகற்றப்பட்டு வருவதாகவும் இச்சம்பவங்களைப் பதிவுசெய்துகொண்டிருந்த ஊடகவியலாளரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதே வேளை, பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிட்டு அனைத்து ஒழுங்குகளையும் பேணுமாறு முப்படைகளுக்கும் கட்டளையிடும் விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். நிலைமை மிகவும் பதட்டமாக இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன (நியூஸ் ஃபெஸ்ட்)