Sri LankaVideos

பா.உ. திரு. மனோ கணேசனுடன் ஒரு உரையாடல் (காணொளி)

கடந்த ஆகஸ்ட் மாதம் 26, 27 ம் திகதிகளில் நடைபெற்ற கனடிய தமிழர் பேரவையின் வருடாந்த தெருவிழாவுக்கு வருகை தந்திருந்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான திரு மனோ கணேசன் மறுமொழி இணையத்தளத்திற்கு அளித்த நேர்காணலின் காணொளி வடிவம் இங்கு தரப்படுகிறது.

மலையகத்தைச் சேர்ந்த தெஹியோவித்த கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் பாரிய சிதைவுக்குள்ளான தமிழ் மகாவித்தியாலயத்தை மீள் நிர்மாணம் செய்யும் பணிக்காக திரு மனோ கணேசன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி கனடிய தமிழர் பேரவை எதிர்வரும் செப்டம்பர் 10ம் திகதி ஒழுங்கு செய்திருக்கும் நிதி சேர் நடை பவனி தொடர்பாகவும் புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகள் தொடர்ந்தும் வடகு, கிழக்கு, மலையக மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை மேற்கொள்ள்வேண்டிய அவசியம் பற்றியும் திரு மனோ கணேசன் இக்காணொள்யில் விளக்கமளிக்கிறார்.