Sri Lanka

பா.உ. சீ.வி.விக்னேஸ்வரனின் “மூத்த தமிழ் மொழி’ பேச்சை பதிவேட்டிலிருந்து நீக்கும்படி சபாநாயகரிடம் வலியுறுத்து


சமாகி ஜன பலவேகயா பா.உ. மனுஷ நாணயக்கார கோருகிறார்

ஆகஸ்ட் 22, 2020: யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.வீ. விக்னேஸ்வரன் தனது முதலாவது பாராளுமன்ற உரையின்போது ” உலகின் மூத்த மொழி தமிழ்” எனக்கூறியது பாராளுமன்றத்தில் அவர் எடுத்த சத்தியப் பிரமாணத்துக்கு எதிரானது எனக் கூறி அதை உத்தியோகபூர்வ பதிவேட்டிலிருந்து (hansard) நீக்க வேண்டுமென காலி மாவட்ட ப.உ. மனுஷா நாணயக்கார சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

“இலங்கையில் தனி நாடொன்றை உருவாக்க இலங்கையின் உள்ளேயோ, வெளியேயோ, ஆதரவை வழங்கவோ, முயற்சிகளை எடுக்கவோ, அவற்றுக்குத் தூபமிடவோ, நேரடியாகவோ, எதிர்மறையாகவோ முயற்சிக்க மாட்டோம் எனப் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே சத்தியப் பிரமாணம் எடுத்திருந்தனர். பா.உ. விக்னேஸ்வரனின் பேச்சு இச் சத்தியப் பிரமாணத்தை மீறியிருக்கிறது” என மனுஷா நாணயக்கார குற்றம்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் தனது முதற் பேச்சை ஆரம்பித்த போது, பா.உ. விக்னேஸ்வரன் முதலில் தமிழில் தனது பேச்சைத் தொடங்கிப் பின்னர் ஆங்கிலத்துக்கு மாற்றினார். தமிழில் அவர் ” கெளரவ சபாநாயகர் அவர்களே, இவ்வுலகின் அதி மூத்த மொழியும், இந் நாட்டின் ஆதிக்குடிகளின் மொழியும், எனது தாய் மொழியுமான தமிழில் உங்களை வாழ்த்திவிட்டுத் தொடர்பு மொழிக்கு மாறுகிறேன்” எனப் பேசியிருந்தார்.

பா.உ. நாணயக்காரவின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக சபாநாயகர் அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.