பா.உ. க்களுக்குக் கையூட்டுக் கொடுப்பதை ஒப்புக்கொண்டார் ஜனாதிபதி

“பாராளுமன்ற உறுப்பினர்களின் ‘திடீர் விலை அதிகரிப்பினால்தான்’ மஹிந்த ராஜபக்சவினால் பெரும்பான்மையைக் காட்ட முடியவில்லை” என்ற ஜனாதிபதியின் பேச்சு நாட்டில் பலரது கேலிக்கு உள்ளாகியுள்ளது.

“சில பா.உறுப்பினர்கள் கட்சி மாறுவதற்கென 500 மில்லியன் ரூபாய்கள் வரை கேட்டார்கள். அப்படியான சந்தர்ப்பங்களை நான் நேரிலேயே சந்தித்திருக்கிறேன். அது ஏலத்தில் விற்பனை செய்வதைப் போல” என டெய்லி மிரர் பத்திரிகைக்கு செய்தி வழங்கும் போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இக் கூற்று சமூக வலைத் தளங்களில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்திய்இருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சம் பெறுவது பற்றி அறிந்திருந்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காதது பற்றி ஜனாதிபதி மீது ஊழல் கமிசனிடம் புகார் செய்யப்பட வேண்டுமென்று பல தரப்புகளும் கேள்விகளை எழுப்புகின்றன என அறியப்படுகிறது.

Credit: Colombo Telegraph