பா.உ. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு கோவிட் தொற்று

தமிழ்த் தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவரது மனைவி, குழந்தை ஆகியோருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக ருவீட் செய்தி மூலம் அவர் அறிவித்துள்ளார்.

தன்னோடு அல்லது தனது குடும்பத்தினரோடு சமீப காலத்தில் தொடர்புகளைப் பேணியவர்களைப் பரிசோதனை செய்துகொள்ளும்படியும், தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அவரோ அவரது குடும்பத்தினரோ தடுப்பூசிகளை எடுத்திருந்தார்களா என்ற விடயம் பற்றி அவர் தனது செய்தியில் குறிப்பிடவில்லை.

இதே வேளை 146 பாராளுமன்ற உறுப்பினர்களே இதுவரை தடுப்பூசிகளை எடுத்திருக்கிறார்கள் என இன்னுமொரு செய்தி தெரிவிக்கிறது. சென்ற வாரம் பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நோய்த் தொற்றுக் காணப்பட்டது எனப் பத்திரிகைச் செய்திகள் தெரிவித்திருந்தன. மக்களுக்குப் போதுமான தடுப்பூசிகள் வழங்கப்படுமட்டும் தாம் தடுப்பூசிகளை எடுக்கப் போவதில்லை எனச் சில ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுத்து வந்திருந்தனர்.

இன்றைய, மற்றொரு செய்தியின்படி, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையொன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுல்ளார் எனத் தெரியவருகிறது. அவர் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்கெனவே பெற்றிருந்தார் எனவும் கூறப்படுகிறது.

நேற்று மட்டும் தொற்றினால் 167 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. அதி கூடிய தொற்றாளர் எண்ணிக்கையைக் கொண்ட நாடுகளில் இலங்கை இப்போது நான்காவது இடத்தில் இருக்கிறது