பாஹுபலி பிரபாஸ் திருமணத்துக்குப் பலியாகப் போகிறாரா? -

பாஹுபலி பிரபாஸ் திருமணத்துக்குப் பலியாகப் போகிறாரா?

நானோ அல்லது அனுஷ்காவோ திருமணம் செய்துகொள்ளும்போதுதான் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

பிரபாஸ்

இந்தியாவின் கதாநாயகன் என வர்ணிக்கப்படும் பாஹுபலி புகழ் பிரபாஸ் ஸுக்கும் ‘பாஹுபலி 2’ நாயகி அனுஷ்கா ஷெட்டிக்குமிடையில் காதல் மலர்ந்துள்ளதாக வந்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

காதல் ஜோடிகள் இருவரும் லாஸ் ஏஞ்ஞலிஸ் இல் குடியிருக்க வீடு தேடுவதாக சமீபத்தில் வதந்திகள் கசிந்திருந்தன.

பிரபாஸ் அனுஷ்கா ஷெட்டியுடன்

பிரபாஸுடனான சமீபத்திய செவ்வி ஒன்றின்போது ” இந்த வதந்திகளெல்லாம் ஒரு நாள் நின்று போகும். ஒன்றில் நான் திருமணம் செய்யப்போவதாக அறிவிக்க வேண்டும் அல்லது அனுஷ்கா அறிவிக்க வேண்டும். ஒன்றில் நீ திருமணம் செய்துகொள் அல்லது நான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று நான் அவளுக்குச் சொல்லப் போகிறேன். வதந்திகளை யாரும் நிறுத்த முடியாது” என்றார் அவர்.

தொழிலைப் பொறுத்த வரையில் பிரபாஸ் ‘பிசி’ யாக்வே இருக்கிறார். ஷிராத்தா கபூர் உடன் இணைந்து நடிக்கும் அவரது அடுத்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் சுஜீத் தயாரிக்கிறார். அவர் நடித்த இன்னுமொரு படமான ‘சாஹோ’ ஆகஸ்ட் மாதம் 30 திரைகளுக்கு வருவதாக இருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  ஜெயலலிதாவின் கதை 'தலைவி' படமாகிறது | MGR ஆக அரவிந்தசாமி
error

Enjoy this blog? Please spread the word :)