பாவம் விஜே சேதுபதி – ஒரு உதைக்கு ரூ. 1001 – இந்து மக்கள் கட்சித் தலைவர் அறிவிப்பு!
முத்துராமலிங்க தேவரை அவமதித்தாராம்
நடிகர் விஜே சேதுபதியை உதைப்பவர்களுக்கு, உதைக்குத் தலா ரூ. 1001 வீதம் தருவதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது ருவிட்டரில் அறிவித்திருக்கிறார். இதனால் அவர் மீது கோயம்புத்தூர் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேசிய விடுதலை வீரரும், அரசியல்வாதியுமான முத்துராமலிங்க தேவரை அவதூறு செய்தமைக்காக நடிகர் விஜேதுபதி மீது இந்து மக்கள் கட்சி கோபம் கொண்டுள்ளதாகவும் அதற்கு மன்னிப்புக் கேட்கும்வரை சேதுபதியை உதைப்பவர்களுக்கு இந்த சன்மானத்தை வழங்கவுள்ளதாகவும் அர்ஜுன் சம்பத் அறிவித்திருந்தார்.
இதற்கு முன்னர் பங்களூர் சர்வதேச விமான நிலையத்தில், நவம்பர் 3 ம் திகதியன்று மஹா காந்தி என்பவர் விஜே சேதுபதியை உதைக்க முயலும் காட்சியுடனான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது. இதன் பின்னான விசாரணையின்போது, விஜே சேதுபதியுடன் ஒரே விமானத்தில் பயணம் செய்ததாகவும், அவருக்கு தேசிய விருது கிடைத்தமைக்காக அவரைப் பாராட்ட முற்பட்டபோது அதற்கு நடிகர் கிண்டலாகப் பதிலளித்தமைக்காக அவரைத் தாக்கியதாக மஹா காந்தி தெரிவித்திருந்தார்.
அது மட்டுமல்லாது, விஜே சேதுபதி தென் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்ற வகையில் ” முத்துராமலிங்கத் தேவருக்காக நடத்தப்பட்ட தேவர் குரு பூஜையில் கலந்துகொண்டீர்களா” எனத் தான் கேட்டதற்கு நான் பேசுவது ஒரு யூதத் தச்சுத் தொழிலாளி (ஜேசு நாதர்) பற்றி எனக் கிண்டலாகப் பதிலளித்தார் என மஹா காந்தி மேலும் தெரிவித்திருந்தார்.
மஹா காந்தியின் இத்தகவலைப் பின்பற்றி இந்து மக்கள் கட்சி மேற்படி சன்மானத்தை அறிவித்திருந்தது.
விமான நிலையச் சம்பவம் பற்றிக் கருத்துக்கூறிய நடிகர் சேதுபதி ” இது ஒரு சிறிய விடயம். அதி ஒருவர் தனது ஃபோனில் படமெடுத்துப் பரப்பியதால் பரபரப்பான செய்தியாகி விட்டது. மஹா காந்தி அப்போது மதுவெறியில் இருந்தார்” எனத் தெரிவித்திருக்கிறார்.