பாலைவனமாகிவரும் அமெரிக்கா
அமெரிக்காவின் தென் மேற்குப் பிராந்தியம் வரலாறு காணாத வரட்சிக்குள் சிக்கித் தவிக்கிறது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இருந்த வரட்சி இப் பிராந்தியத்தைத் தகித்து எடுக்கிறது. அரிசோனா, நெவாடா தொடங்கி மெக்சிக்கோ வரை இவ்வரட்சி பரவி வருகிறது.
மீட் ஏரி மற்றும் கொலொறாடோ ஆறு ஆகியன அமெரிக்காவின் தென்மேற்குப் பிராந்தியத்திற்கு நீர்வழங்கும் நிலைகளாகவிருக்கின்றன. கலிபோர்ணியா, அரிசோனா, நெவாடா, கொலொராடோ, நியூ மெக்சிக்கோ, யூட்டா, வயோமிங் ஆகிய மாநிலங்களும் மெக்சிக்கோ நாடும் கொலொராடோ ஆற்றினால் பயன்பெற்று வருவன. 1930 இல் நெவாடா-அரிசோனா எல்லையில் கட்டப்பட்ட ஹூவர் அணையினால் உருவாக்கப்பட்டது மீட் ஏரி.
கொலொராடோ ஆற்றின் நீரில் மூன்றிலொரு பங்கை கலிபோர்ணியா மாநிலம் எடுத்துக்கொள்கிறது. தேசிய காலநிலை மாற்ற சஞ்சிகையினால் இந்த அவ்ருடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி மீட் ஏரியின் நீர்க்கொள்ளளவு இந்த மாதம் 27% த்திற்குக் குறைந்திருக்கிறது. சென்ற மாதம் இதன் கொள்ளளவு 37% ஆக இருந்தது. 1200 வருடங்களுக்குப் பிறகு தொடர்ந்து 22 வருடங்களாக இவ்வரட்சி தொடர்வதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இதன் காரணமாகப் பல மாநிலங்களுக்கு வழங்கப்படும் நீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அரிசோனா, கலிபோர்ணியா மாநிலங்களும் மெக்சிக்கோவும் இன் நீர்வழங்கல் குறைப்பால் மிகவும் பாதிக்கப்படலாமெனக் கூறப்படுகிறது. ( Sunken boat along the shoreline of Lake Mead, Nevada, June 22, 2022 © AP / John Locher)