பாலஸ்தீன விவகாரம் | ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்தது கனடா -

பாலஸ்தீன விவகாரம் | ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்தது கனடா

வழமையான் ஈஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டில் மாற்றம்

நவம்பர் 19,2019

பாலஸ்தீனியர்களின் தனி ஆட்சி விவகாரம் மேலும் ஒரு தடவை ஐ.நா.வில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது கனடா சுயாட்சிக்கு ஆதரவாக . வாக்களித்தது2006 இல்ஸ்டீபன் ஹார்ப்பர் பதவிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து 14 தடவைகள் இதே தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க மறுத்து வந்தது.

கடந்த செவ்வாயன்று ஐ.நா.வில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அமெரிக்கா, இஸ்ரேல், மார்ஷல் தீவுகள், நவூறு மற்றும் ஐக்கிய மைக்குறோனேசியா நாடுகள் ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே எதிர்த்து வாக்களித்திருந்தன. பின்கூறப்பட்ட மூன்று பசிபித் தீவுகளும் அமெரிக்க உதவியில் இருப்பவை.

பாலஸ்தீன மேற்குக் கரையில் இஸ்ரேல் அத்துமீறி அமைத்துவரும் இஸ்ரேலிய குடியிருப்புகள் சர்வதேச விதிகளை மீறவில்லை எனத் திங்களன்று அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பெயோ கூறியிருந்தார். கனடாவின் இந்த நிலைப்பாடு இவ் விடயத்தில் அமெரிக்காவுடன் கனடா உடன்படவில்லை என்பதையே காட்டுகிறது.

மத்திய கிழக்கு கொள்கை தொடர்பில் முன்னாள் லிபரல் அரசின் பிரதமர் போல் மார்ட்டின் காலத்தில் இருந்து இஸ்ரேல் சார்பாந நகர்வை மேற்கொண்டு வந்தது. ஸ்டீபன் ஹார்ப்பரின் ஆட்சிக் காலத்தில் இது வேகமடைந்தது.

இஸ்ரேல் – பாலஸ்தீனிய விவகாரம் தொடர்பாக ஐ.நா.வில் பிரதி வருடமும் 16 தீர்மானங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவை சுயாட்சி, அகதிகள், கிழக்கு ஜெரிசலேம், மனித உரிமைகள், குடியிருப்புகள் மற்றும் புனித தலங்கள் பற்றியவையாக இருக்கும். அமெரிக்க, இஸ்ரேல் எதிர்ப்புகளையும் மீறி அவை எல்லாமே பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறுவதுணடு.

ஸ்டீபன் ஹார்ப்பர் ஐ.நா. பாதுகாபுச் சபையில் – செப்டம்பர் 24, 2014 [படம்: ஷோன் கில்பற்றிக் / சனேடியன் பிறெஸ்]

2011 இல் ஹார்ப்பர் கனடாவில் பெரும்பான்மை அரசை அமைத்ததிலிருந்து ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட 16 தீர்மானங்களில், 14 தீர்மானங்களுக்கு எதிராக வாக்களித்தும், 2 தீர்மானங்களில் வாக்களிக்காமலும் இருந்தது. நேற்றய வாக்கெடுப்பு வரை ட்ரூடோவின் அரசும் ஹார்ப்பர் அரசைப் பின்பற்றியே வந்திருக்கிறது.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இடம்பிடிக்க வேண்டுமென்ற கனடாவின் ஆசையில் இது மண்ணை அள்ளிப் போடும் விவகாரமாக இருப்பினும் இந்த தடவை கனடா துணிச்சலோடு கோட்பாடு ரீதியான முடிவை எடுத்திருப்பது வரவேற்கப்பட வேண்டியதொன்று.

இந்த தடவை, ஐ.நா. தீர்மானம் இஸ்ரேல் எழுப்பி வரும் தடுப்புச் சுவர் சம்பந்தமாகவும், 1967 முதல் இஸ்ரேல் கைக்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பது பற்றியும், பாலஸ்தீனிய சுயாட்சி துரிதப்படுத்தப்பட வேண்டுமென்பது பற்றியும் இருந்தது.

இஸ்ரேல் மற்றும் யூத விவகாரங்களுக்கான மையம் கனடாவின் நடவடிக்கையைக் கண்டித்திருந்தது. ” ஐ.நா. பொதுச் சபையில், இஸ்ரேலைப் பழிசுமத்தும் வருடாந்த சடங்கை எதிர்க்காது அதில் கனடா கலந்துகொண்டது குறித்து நாம் பெரிதும் ஏமாற்றமடைகிறோம்” என மையத்தின் தேசிய இணைத் தலைவர் ஜோஎல் றீய்ட்மான் தெரிவித்தார்.

Related:  கனடா | ட்ரூடோ 2.0 அரசின் அமைச்சரவை - ஒரு சிறுபான்மைப் பார்வை

வட கொரியா, சிம்பாப்வே, பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆகியன இத் தீர்மானத்தைப் பொதுச் சபையில் கொண்டுவருவதற்குக் காரணமாயிருந்தன.

மத்திய கிழக்கில் நீதிக்கும் சமாதானத்துக்குமான கனடியர்களின் அமைப்பு கனடாவின் செயற்பாட்டை வரவேற்றிருக்கிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)