பாலஸ்தீன இஸ்ரேலிய குடியிருப்புகள் சட்டவிரோதமானவையல்ல - அமெரிக்கா -

பாலஸ்தீன இஸ்ரேலிய குடியிருப்புகள் சட்டவிரோதமானவையல்ல – அமெரிக்கா

நவம்பர் 18, 2019

A general view shows Palestinian houses in the village of Wadi Fukin as the Israeli settlement of Beitar Illit is seen in the background, in the occupied West Bank [File: Nir Elias/Reuters]
பாலஸ்தீன மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியிருப்புகள் (பின்னணி) -முன்னால் இருப்பது பாலஸ்தீனக் குடியிருப்பௌகள் [படம்: எலியாஸ் / ராய்ட்டர்ஸ்]

ஜோர்தான் ஆற்றின் மேற்கு கரையில் இஸ்ரேலிய கடும்போக்காளர்களால் அரசாங்க ஆதரவுடன் அத்துமீறிக் கட்டப்பட்டுவரும் குடியேற்றங்கள் இனிமேலும் சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானவையல்ல என அமெரிக்கா நேற்று (திங்கள்) அறிவித்துள்ளது. இது குறித்து பாலஸ்தீனியர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், பல உலக நாடுகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கின்றன.

” சகல தரப்புகளினதும் சட்ட விவாதங்களை ஆராய்ந்ததில் மேற்கு கரையில் அமைக்கப்பட்டுவரும் இஸ்ரேலிய குடியேற்றங்கள் சர்வதேச சட்ட நியமங்களுக்கு விரோதமானவையல்ல என இன் நிர்வாகம் தீர்மானிக்கிறது” என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பெயோ நேற்றுத் தெரிவித்துள்ளார்.

மேற்குக் கரையில் இஸ்ரேலினால் எழுப்பப்படும் குடியேற்றங்கள் சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானவை என 978 இல் அமெரிக்க ராஜாங்கச் செயலகம் கொடுத்திருந்த சட்ட அபிப்பிராயத்தை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின் நிர்வாகம் இனிமேலும் அங்கீகரிக்கப் போவதில்லை என மைக் பொம்பெயோ மேலும் தெரிவித்தார்

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  கனடா | ட்ரூடோ 2.0 அரசின் அமைச்சரவை - ஒரு சிறுபான்மைப் பார்வை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)