World

பாலஸ்தீனம்: ஹமாஸின் சுரங்கப்பாதைகளைக் கடல் நீரால் நிரப்பும் இஸ்ரேல்

ஹாசாவிலுள்ள ஹமாஸ் போராளிகளின் சுரங்கப்பாதைகளைக் கடல் நீரினால் நிரப்பும் முயற்சியை இஸ்ரேல் ஆரம்பித்திருகிறது என அநாமதேய அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக வால்ஸ்றீட் ஜேர்ணல் மற்றும் ஏபிசி நியூஸ் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

இந் நடவடிக்கை மிக நீண்ட காலத்தை எடுக்குமெனவும் இதன் மூலம் இஸ்ரேல் எதிர்பார்க்கும் பெறுபேறுகள் கிடைக்குமென்பது சந்தேகமே எனவும் வால்ஸ்ட்றீட் ஜேர்ணல் தெரிவித்துள்ளது.

இச்சுரங்கப் பாதைகளில் போராளிகள் தமது ஆயுதங்களோடு கடத்திச்செல்லப்பட்ட பணயக் கைதிகளையும் மறைத்து வைத்திருப்பதாக அமெரிக்கா நம்புகிறது. இருப்பினும் இந்நடவடிக்கை ஹாசாவின் நன்னீர் வடிகாலமைப்புகளை நிரந்தரமாகப் பாதித்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறதெனவும் சில அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்திருக்கிறார்கள். (Image Credit: The Telegraph)