Spread the love
பாலஸ்தீனிய ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்கிறது
பாலஸ்தீனம் | இஸ்ரேலிய தாக்குதலில் ஜிஹாதி அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார் 1
காசாவின் மீது இஸ்ரேல் தாக்குதல்

காசாவில் தளமமைத்திருந்த பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பின் தலைவர், 42 வயதுடைய, பஹா அபு அல்-அட்டா, இஸ்ரேலிய வான் தாக்குதலின் போது கொல்லப்பட்டார். சிரியாவில் இருக்கும்போது இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட குறிவைக்கப்பட்ட தாக்குதலிலிருந்து முன்னர் இவர் தப்பியிருந்தார். இஸ்லாமிக் ஜிஹாத்தின் ஆயுதப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின் மூலம் இது ஒரு குறிவைக்கப்பட்ட தாக்குதல் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

காசா நகரத்திலுள்ள ஷெஜாயா மாவட்டத்தில் இருந்த அபு அல் அட்டாவில் வீடு, அதி காலை இஸ்ரேலினால் குறிவைக்கப்படுத் தாக்கப்பட்டதெனவும் இத்தாக்குதலின் போது அபு அல்-அட்டாவின் மனைவியும் கொல்லப்பட்டும் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் மருத்துவ சேவையினர் மூலம் தெரியவந்துள்ளது.விமானத் தாக்குதல்

சமீபத்தில் இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை, ட்றோன், ஸ்னைப்பர் தாக்குதல்களையும், நாட்டிற்குள் அத்துமீறிப் புகுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டதையும் காரணம் காட்டி, இஸ்ரேலிய பிரதமர் பென்யாமின் நெட்டன்யாஹு இத் தாக்குதல்களுக்கு உத்தரவு வழங்கினார் என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

“இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களுக்கு அபு அல்-அட்டாவே பொறுப்பானவர் எனவும் அவர் பல வழிகளிலும் இப் பிராந்தியத்தில் தாக்குதல்களை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருந்தார் என்றும் அவரது தொடரும் இருப்பு பேராபத்தை விளைவிக்கக் காத்திருந்தது என்றும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்திருக்கிறது.

இத் தாக்குதலுக்குப் பதில் தாக்குதலை மேற்கொண்ட இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பு இஸ்ரேல் பிரதேசங்களின் மீது பல ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது.

“ஒரு தவிர்க்க முடியாத தாக்குதல் முழு ஜியோனிஸ்ட் பிரதேசத்தையும் அதிரவைக்கும்” என அவ்வமைப்பு இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

“இதனால் வரப்போகும் விளைவுகளுக்கான முழுப் பொறுப்பினையும் இஸ்ரேல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அபு அல்-அட்டாவின் கொலைக்கான தண்டனை கிடைத்தேயாகும்” எனக் காசா பிரதேசத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.

கடந்த 10 வருடங்களாக காசா பிரதேசத்தின் 2 மில்லியன் மக்கள் இஸ்ரேல்-எகிப்து இணைந்து மேற்கொள்ளும் கடுமையான பொருளாதாரத் தடையினால் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மக்களின் நடமாட்டம் வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்ட அமைப்புகளின் தலைவர்களை இலக்குவைத்து அழிப்பது என்பது பொதுவாக இஸ்ரேலின் நடைமுறையல்ல என்றும் இச் சம்பவம் இரு தரப்புகளினிடையே மிகவும் ஆபத்தான முறுகல் நிலையை உருவாக்கியிருக்கிறதென்றும் அவதானிகள் கருதுகிறார்கள்.

இத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலை நோக்கிப் பல ஏவுகணைகள் வீசப்பட்டதென்றும் வர்த்தகத் தலைநகரான ரெல் அவிவ் உட்பட, இஸ்ரேலின் மத்திய, தென் பகுதிகளில் எச்சரிக்கைக் கருவிகள் ஒலித்தனவென்றும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்திருக்கிறது.

இவ் வேவுகணைத் தாக்கிதல்களினால் ஒரு வீடு சேதமாக்கப்பட்டதெனவும், நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த வாகனங்கள் மயிரிழையில் தப்பியதாகவும், ஸ்டெறொட் நகரிலுள்ள தொழிற்சாலை ஒன்று தீப்பிடித்து எரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

39 பேருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இரு தரப்புக்குமிடயே சண்டை தொடரலாமென நெட்டன்யாஹு தெரிவித்துள்ளார். செவ்வாயிரவும் பாலஸ்தீனிய ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்வதாக அறியப்படுகிறது.

“சண்டை உக்கிரமடைவதை நாங்கள் விரும்பவில்லையெனினும் எங்களது உயிர்களைப் பாதுகாக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம். இதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். அதுவரை பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது” என நெட்டன்யாஹு மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email