பார்செலோனா | 2,292 தாவரங்கள் கேட்டு மகிழ்ந்த இசை நிகழ்ச்சி

பார்செலோனா | 2,292 தாவரங்கள் கேட்டு மகிழ்ந்த இசை நிகழ்ச்சி

Spread the love

பார்செலோனா, ஸ்பெயினில் உள்ள எல் லைசூ இசை மண்டபத்தில் (opera house) நேற்று (திங்கள், ஜூன் 22) ஒரு அற்புதமான இசை நிகழ்வு நடந்தது. அதன் பார்வையாளர்கள்? 2,292 சட்டித் தாவரங்கள்!

கொறோணாவைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக கடந்த மூன்று மாத காலமாக ஊரடங்கு விரதத்தைப் பிடித்து வந்த ஸ்பெயின், கடந்த வார இறுதியில் அதை முடித்துக்கொண்டது. அதைக் கொண்டாடு முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியின் முதலாவது காட்சி நிரம்பி வழிந்தது. அத்தனையும் சட்டித் தாவரங்கள்.

ஸ்பானிய கருத்தியல் கலைஞரான (conceptual artist) இயூஜீனியோ அம்பூடியாவின் எண்ணக்கருவான இன் நிகழ்வு மனித – இயற்கை இசைபட வாழ்தலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு விடயமாகப் பார்க்கப்படுகிறது.

பார்செலோனா | 2,292 தாவரங்கள் கேட்டு மகிழ்ந்த இசை நிகழ்ச்சி 1
இயூஜீனியோ அம்பூடியா

“இக் கொள்ளை நோயின்போது நடைபெற்றுவரும் சம்பவங்களை நான் உற்று அவதானித்து வருபவன். மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவின் கட்டமைப்பை நாம் சீர்குலைத்ததால் ஏர்ப்பட்ட இந்த அனர்த்த காலத்தில் நான் இயற்கையை மிகவும் கூர்மையாக அவதானித்தேன். பெருந்தொகையான பறவைகள் கீதமிசைத்தன.எனது தோட்டத்திலும், வெளியிலும் தாவரங்கள் மிகவும் செழிப்பாகவும் விரைவாகவும் வளர்ந்தன. இயற்கையோடு இசைபட வாழ்தலுக்கான முக்கியத்துவத்தை இந்த நோய் எனக்கு அறைந்து உணர்த்தியிருக்கிறது” என்கிறார் இயூஜீனியோ.

இந்த நிகழ்வோடு, இசை மண்டபம் தனது விழாக்காலத்தை ஆரம்பித்து வைத்தது.


Print Friendly, PDF & Email