பாராளுமன்றத்தைக் கூட்டுவது அத்தியாவசியமானது – எம்.ஏ.சுமந்திரன்
“நாங்கள் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்றால் பாராளுமன்றம் கூட்டப்படுவது மிகவும் அத்தியாவசியமானது. அது நடக்கப்போவதில்லை என ஜனாதிபதி அடம் பிடிப்பது முற்றிலும் தவறானது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
15-20 வருடங்களாக அரசியல் கைதிகள் சிறையில் வாடுகிறார்கள். தொடரும் இந்த இடர்க்காலத்திலாவது அவர்களை விடுதலை செய்வதற்கு ஒரு வழி செய்யுங்கள் என்று கேட்டோம். ‘அது கட்டாயம் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அது பற்றி ஜனாதிபதியிடம் பேசிவிட்டு ஒரு பதில் தருகிறோம்’ எனப் பிரதமர் கூறினார்.
எம்.ஏ.சுமந்திரன், மே 04, 2020, பிரதமருடனான சந்திப்பின் பிறகு
“வடக்கு கிழக்கில் நடைபெற்ற சில முக்கிய விடயங்கள் பற்றி நாங்கள் பேசியிருந்தோம். திரு. பசில் ராஜபக்ச அங்கிருந்து சகலவற்றையும் அவதானித்தார். எங்களுக்கு ஒரு முடிவைச் சொல்வதாக அங்கு அறிவிக்கப்பட்டது.
15-20 வருடங்களாக அரசியல் கைதிகள் சிறையில் வாடுகிறார்கள். தொடரும் இந்த இடர்க்காலத்திலாவது அவர்களை விடுதலை செய்வதற்கு ஒரு வழி செய்யுங்கள் என்று கேட்டோம். ‘அது கட்டாயம் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அது பற்றி ஜனாதிபதியிடம் பேசிவிட்டு ஒரு பதில் தருகிறோம்’ எனக்கூறினார்.
பாராளுமன்றம் கூட்டப்படுவது அத்தியாவசியமானது. நாங்கள் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமென்றால், அதற்கு மூன்று அம்சங்கள் உண்டு. ஒன்றினால் மட்டும் எதையும் சாதித்துவிட முடியாது. பாராளுமன்றம் இல்லாத ஜன்நாயக நாடு என்று உலகத்தில் இல்லை.
எனவே பாராளுமன்றம் உடனடியாகக் கூட்டப்படவேண்டும். ஜனாதிபதி நினைத்துக்கொடிருப்பது முற்றிலும் தவறானது. அதை அவரால் புரிந்துகொள்ள முடிகிறதோ தெரியாது. அவர் ஒருநாளும் பாராளுமன்றத்தில் இருந்ததில்லை. இது ஒரு ஜனநாயக நாடாகவிருந்தால் அது பாராளுமன்றமில்லாது ஆட்சிசெய்யப்பட முடியாது.
நாங்கள் இது பற்றிப் பிரதமருக்கு கூட்டாகக் கையெழுத்திட்டு, எழுத்துமூலம் கொடுத்துள்ளோம். அவருக்குத் தெரிகிறது. ஆனால் முடிவு அவரது கைகளில் இல்லை. ஜனாதிபதியிடமே அது இருக்கிறது” என நேற்று (மே 4) பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுடன் பேசும்போது சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.