Sri Lanka

பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கில்லை – ரணில்

செல்டம்பர் 5, 2019

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் வர்ப்போகும் புதிய ஜனாதிபதிக்கு இருக்காது. அரசியலமைப்பின் 19 வது திருத்தம் அதை நிறைவேற்று ஜனாதிபதியிடமிருந்து எடுத்து பாராளுமன்றத்திடம் கொடுத்துவிட்டது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் பிமால் றத்னாயக்கா சபையில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இதைக் கூறினார்.

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான தேவை எழும் பட்சத்தில் பாராளுமன்றம் அதைக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர்தான் நிறைவேற்றும் என அவர் தெரிவித்தார்.

தற்போதிருக்கும் 15 வது பாராளுமன்றம் ஆகஸ்ட் 17, 2015 இல் மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வந்தது. அதன் ஆயுட்காலம், முதலாது இருக்கை நடைபெற்ற தினமாகிய செப்டம்பர் 1, 2015 இலிருந்து ஐந்து வருடங்களுக்கு நீடிக்கும்.

2015 இல் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய முன்னணி 106 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 95 ஆசனக்களையும், தமிழர் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசங்களையும், ஜே.வி.பி. 6 ஆசனங்களையும், சி.ல.மு.காங்கிரஸ் மற்றும் ஈ.பி.டி.பி. தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.